கடந்த வாக்கெடுப்புக்கு எனக்கு கிடைத்த பட்டம் என்ன தெரியுமா? ‘முட்டாள்’ என்பதாகும். இதுபோல யாரேனும் உங்களைச் சொன்னால் உங்கள் நிலை என்ன?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 355Votes/34Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, கடந்த வாக்கெடுப்புக்கு எனக்கு கிடைத்த பட்டம் என்ன தெரியுமா? ‘முட்டாள்’ என்பதாகும். இதுபோல யாரேனும் உங்களைச் சொன்னால் உங்கள் நிலை என்ன?
என்னைப்பற்றி அவனு(ளு)க்கென்ன தெரியும்? உதாசீனம் செய்வேன் 59% (அதிக வாக்கு)
முட்டாள் என்பது முட்டு கொடுக்கும் ஆள் என்று அர்த்தம் என்பேன். 16% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, மனிதன் ஓர் சமூக விலங்கு என்று ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். அத்தகைய மனிதன், மனம்+இதன்=மனிதன் என்றாவன் என்று ஞானிகள் சொல்லுகிறார்கள். ஓவ்வொருகாலமும், விஞ்ஞானத்திலும், தகவல் தொழில் நுட்பத்திலும், வாழ்வுக்கான உபயோகப் பொருட்களிலும் பெரும் முன்னேற்றம் பெற்றுள்ள மனிதன் தன்னையும், தன்னுடைய வாழ்வின் தரத்தையும், அவனுடைய அறிவாட்சித் தரத்தையும் உயர்த்திக் கொள்ளவதற்கு தவறிவிட்டானோ என்று நினக்கத் தோன்றுகிறது.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் ஒரே சமூகமாக உள்ளவர்கள்தான். மேலும் இக்காலத்தில் அத்தகைய மாற்றமும், அந்த மாற்றத்தை எல்லோரும் அறியும் சந்தர்ப்பமும், வாய்ப்பும் கிடைத்துவிட்டது. என்றாலும் கூட தானும் அந்த சமூகத்தின் ஒருவர்தான் என்ற நினைப்பு அற்றுப்போக, இன்னொரு மனிதரை மதிக்காத நிலையும், கீழாக நினைத்து நடத்தும் நிலையும் உள்ளது. அதாவது சம நோக்கான பார்வை இல்லை. எந்த வகையிலாவது, நான் உன்னைவிட உயர்ந்தவன் என்ற ‘உயர்ந்த மனப்பான்மை’ கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பிறரை குறித்து மிகச் சாதாரணமான கருத்தையும் வைத்திருக்கிறார்கள். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மிகைப்போக்கும் உள்ளது என்று சொல்லலாம். இதனால் யார் எதை சொன்னாலும், 1) அவர் யார்? 2) என்ன தகுதியுள்ளவர்? 3) அவரின் அனுபவம் என்ன? 4) எதன் அடிப்படையில், எதற்காக இப்படி சொல்லுகிறார்? 5) இதன் விளைவாக அவர் என்ன எதிர்பார்க்கிறார்? 6) இதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்று கேள்வியின் ஊடாக சிந்திப்பதே இல்லை.
உடனே எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில், அடுத்தவரை ‘முட்டாள், உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று வசைபாடிவிடுவார்கள். இதை எதிராளாக நாம், பொருட்டாக மதிக்கவேண்டிய அவசியம் இல்லைதான் என்றாலும், அப்படிச் சொல்லுபவர் தன் தவறை உணரவேண்டும் அல்லவா? அதற்காக அவருக்கான விளக்கத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தரவேண்டியதும் அவசியம். முக்கியமாக அவரை நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைப்பதும் ஒரு நல்ல வழியே. ஆனால் இதற்காக நாம் வருத்தப்பட ஒன்றுமே இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பொதுவாக, நம்மை எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்று நாம் முடிவு செய்வது தவறு. நாம் நம்முடைய வழியில், வேலையில், சொல்லில், செயலில் மிகச்சரியாக இருந்தால், இப்படியான ஆட்களை வெகு சுலபமாக தவிர்த்துப்பழகி, நாம் மட்டும் முன்னேறிக்கொண்டே இருக்கலாம். அவர்கள் அதே இடத்தில், பலகாலத்திற்கு நின்று கொண்டே இருப்பார்கள் என்பதே உண்மை.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
1 Comments