இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
வேதாத்திரியம் முழுமையானதா? என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்?
வேதாத்திரியம் ஒன்றே முழுமையானது 68% ( சரியான / அதிக வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், யோகத்தின் வழியாக ‘நான் யார்?’ என்ற தன்னையறிதலும், அதன் வழியாக இறையுணர்வு பெறுதலும் நிகழ்கிறது. இந்த யோகத்திலும், மனிதர்களுக்கு ஏற்றபடி தருவதற்கு பல்வேறு யோகசாதனைகள் உருவாகிவிட்டன. அது காலத்தின் கட்டாயமும், இயல்பும் ஆகும்.
அந்தவழியில், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தோற்றுவித்த யோகசாதனையான மனவளக்கலை என்பதும் ஒன்று, அவர் வழங்கிய தத்துவங்களை வேதாத்திரியம் என்று நாம் அழைக்கிறோம். மனிதனின் அவ்வப்பொழுதைய அறிவாட்சித்தரத்தை ஒட்டியும், அதில் அவர்களை மேன்மை செய்யவேண்டும் என்றே ஞானிகள் நினைப்பார்கள்.
குரு மகான் வேதாத்தி
ரி மகரிஷி, இதுவரையில் யோகத்தில் உண்மையோடு, அந்த உண்மைபோலவே கலந்து வந்த குழப்பங்களை நீக்கி, ஒரு மனிதனின் சராசரி வாழும் காலத்திற்குள்ளேயே ‘‘நான் யார்?’ என்ற தன்னையறிதலுக்கும், இறையுண்மை உணர்வுக்கும் வழிதந்து, அதை நிகழ்த்தியும் காட்டியுள்ளார். விருப்பம் உள்ளோருக்கு மட்டும் என நிறுத்திவைக்காமல், உலக மக்கள் அனைவருமே, பிறப்பின் கடமையான, தன்னையறிதல் உணர்வை பெற்று, இன்பமாக வாழவும், வாழும் காலம் முழுவதும் துன்பம் இல்லாமல், இயற்கையோடு ஒன்றி வாழவும், வேதாத்திரியத்தை வழங்கியுள்ளார்.
மேலும் தன்னையறிதலின் வழியாக, மனிதன் தனிமனித அமைதியை பெறமுடியும், அதன்வழியாக உலக சமாதானத்தையும் பெறலாம் என்றே 10 அம்ச திட்டங்களையும், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் தந்துள்ளார்.
அதுவே இன்னும் சிறப்பாக, கல்வியாகவும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடமாகவும் வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பருவம் வந்த அனைத்து மாணவ, மாணவியருக்கும், தனிமனிதர்களுக்கும் வேதாத்திரியம் சேர்கிறது.
இத்தகைய சிறப்பம்சம் வேதாத்திரியம் கொண்டிருப்பதால், யோகத்தில் முழுமையான வழி என்று உறுதியாக சொல்லமுடிகிறது! வழக்கம்போல சிலர் எதிர்வழக்காடுவதை நாம் தவிர்க்க முடியாது. அதில் நாம் கவனம் கொள்ளவேண்டியதில்லை.
வேதாத்திரியர்கள் மட்டுமல்ல, உலகின் எல்லாமனிதர்களும் வேதாத்திரியத்தின் பெருமை உணர்ந்து கொள்ளும் நாள், இதோ வந்துகொண்டே இருக்கிறது.
வாழ்க வளமுடன்
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments