Ticker

6/recent/ticker-posts

When someone who is in Bhakti marga change to Yoga marga?

காலம்காலமாகவும், பிறந்தது முதலும் பக்தியில் ஊறித்திளைத்தவர்கள் யோகத்திற்கு வர வாய்ப்பு உள்ளதா? உங்கள் கருத்து என்ன?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 353Votes/27Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, காலம்காலமாகவும், பிறந்தது முதலும் பக்தியில் ஊறித்திளைத்தவர்கள் யோகத்திற்கு வர வாய்ப்பு உள்ளதா? உங்கள் கருத்து என்ன?

எது உண்மை? என்ற விளக்கம் பெற நிச்சயம் வருவார்கள் 67% (அதிக வாக்கு)

யோகத்திற்கு வந்தாலும் கூட பக்தி அவர்களை விடவேவிடாது! 21% (சிறப்பு வாக்கு)

-

அன்பர்களே, பக்தி என்பதை, தானாகவே வருவதும் உண்டு, பெற்றோர், மற்றோர் வழியாக ஊட்டப்படுவதும் உண்டு. ஏதேனும் ஒரு இக்கட்டான வாழ்க்கைச்சூழல் மாறுவதற்காக பக்தியை பற்றிக்கொண்டோரும் உண்டு. இப்படியான பக்தியும், அதில் ஆர்வமும், சிறுவயது முதல் வேறெந்த வயதிலும் வர வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் அறியலாம். மேலும், இந்த மூன்று வகையினர் தவிர இன்னும் பலரும் உண்டு என்பதும் உண்மையே!

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

ஒவ்வொடு மனிதரின் வாழ்விலும் பக்தி அடிப்படையாகவே இருக்கிறது, இருந்துகொண்டும் இருக்கிறது. இப்போது பக்தியில் ஆர்வமில்லாமலும், இறைவழிபாட்டை மதிக்காதவரும், கடவுளே இல்லை என்போரும் கூட, அவர்களுடைய சிறுவயதில், ஏதேனும் ஒரு வயதுகாலத்தில் பக்தியில் இருந்தவர்தான் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அவர்களுக்கு கிடைத்த ஒரு ஏமாற்றம், இறை குறித்தான தெளிவின்மைதான் இப்படியான மறுப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். இப்போது பக்தியில் திளைத்தவர்களுக்கு வருவோமே!

பக்தி வழி என்றால், இயமம், நியமம் என்று ஒழுங்குகளை கடைபிடித்து வழிபடுவோரும் உண்டு. மிகச்சாதரணமாக, வீட்டிலோ, கோவிலிலோ அன்றாடம் வழிபட்டு வருவோரும் உண்டு. இவர்களுக்கு எல்லாமே இறை பார்த்துக்கொள்ளும் என்ற கருத்து மேலோங்கி, வழக்கமான செய்களில் இருப்பார்கள். ஏற்கனவே இவர்களுக்கு யோகம் தேவையில்லை என்று கருத்து சொல்லப்பட்டிருக்கும். அதாவது, இறையை இப்படி வணங்கி வந்தாலே போதுமானது, இதற்காக எல்லாம் துறந்து, சாமியாராக போகவேண்டியதில்லை என்றுதான் அறிவுரை சொல்லப்பட்டிருக்கும். துறவு என்றால் என்ன என்று தெரியாமலேயே, அதற்கு பயந்துபோய் கூட, பக்தி வழியில் ஊறித்திளைத்து இருப்பார்கள். அதையே தன் வழிவந்த குழந்தைகளுக்கும் சொல்லி வளர்ப்பார்கள். எனவே பெரும்பாலும், யோகத்தின் பக்கம் திரும்பிட வழி இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

என்றாலும் கூட, தன் வாழ்வில் நிகழும் சில குழப்பம், அதன் தீர்வு, ஒரு ஏமாற்றம் என்ற நிலை வந்தால், இவ்வளவு காலம் வழிபட்டும் இப்படி நிகழ்கிறதே? இது நமக்கு சோதனை என்றால், அப்படி நமக்கு இறை சோதனை கொடுக்கிறது என்றால், அத்தகைய இறை என்பது என்ன? என்று தெரிந்து கொள்ள, சிறிதளவாவது ஆர்வம் பிறக்கும் அல்லவா? அந்த சிறு நெருப்புப் பொறி போதுமே?!

அப்படி நினைத்தவர், சூழல் கருதி யோகத்திற்கு வரமுடியவில்லை என்றாலும் கூட, அவரது வாரீசுகளில் யாரேனும் ஒருவர், யோகத்தில் ஆர்வமாகி தன்னை இணைத்துக்கொள்வார். அந்த பரம்பரை வழியில், ஒருவர் யோகத்திற்கு வந்துவிட்டாலே முழுவதும் மாறிட வழி பிறந்துவிடும். எனவே காலம்காலமாகவும், பிறந்தது முதலும் பக்தியில் ஊறித்திளைத்தவர்கள் யோகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது, ஆனால் கொஞ்சம் காலம் ஆகும்! 

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments