ஆன்மீக வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி எதையும் புரிந்துகொள்ள சிலர் மறுப்பதற்கு என்ன காரணம்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 390Votes/26Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, ஆன்மீக வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி எதையும் புரிந்துகொள்ள சிலர் மறுப்பதற்கு என்ன காரணம்?
மன நிலை அமைதியாக சரியாக இருப்பதில்லை 61% (அதிக வாக்கு)
புரிந்துகொள்ளுவதில் ஏற்படும் தவறு அது 13% (சிறப்பு வாக்கு)
அடிக்கடி ஏற்படும் பதட்டம், மன குழப்பம், அவசரம் 12% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, இந்த உலகம் சுருங்கிவிட்டது என்றால் நம்புவதற்கு முடியாமல் இருக்கலாம். ஆனால் உலகின் மறுமூலையில், பகலில் நாம் இருக்கும் பொழுது, இரவில் நடக்கும் ஒரு சம்பவத்தை நேரடியாகவே, நாம் நம்முடைய கைபேசியிலேயே பார்த்து விடுகிறோம் அல்லவா? மேலும் ஒரு பிரச்சனை, தீர்வு என்பது, உலகம் முழுவதுமே சில நிமிடங்களில் பகிர்ந்துகொள்ளவும் வழி உண்டாகிவிட்டதுதானே? அப்படியானால் உலகம் சுருங்கிவிட்டதுதானே? நல்லதுதான். காலமாற்றத்தில் தொடர்ந்து நிகழ்வதுதான். ஆனால் மனிதன் எப்படி இருக்கிறான்?
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
நம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியாலும், கண்டுபிடிப்பாலும் உலகம், சுருங்கிவிட்டது. ஆனால் மனிதனும் தன்னை சுருக்கிக் கொண்டானோ என்று கருதுவிட வாய்ப்பாக உள்ளது. உண்மையில், இக்காலத்தில் வாழும் மனிதன், உலகையே தன் கைக்குள் வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய மனிதன், மனதை பரந்தளவில் வைத்து பரவசப்பட வேண்டாமா? உலகம் முழுவதும் தன் எண்ண அலைகளை பரப்பி மகிழ்வாக கொண்டாட வேண்டாமா? ஆனால் தன்னளவில் சுருங்கிக் கொண்டானே?!
அதனால்தான், அவனிடம் இன்னொருவர், பேசவும் முடியவில்லை, எழுதி பகிரவும் முடியவில்லை. ஆன்மீக வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி எதையும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் அளவில் ஒர் வட்டம் போட்டு, நான் இப்படித்தான் இருப்பேன் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ? சிலர் எதிராளின் மீது, அது நண்பராக இருந்தாலும் கூட வன்மத்தை கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. உங்களுக்கும் அப்படியான அனுபவம் உண்டுதானே?!
சொல்லுகிற விசயத்தை, வார்த்தையை முடிப்பதற்குள்ளாகவே, அவரே ஏதேனும் புரிந்துகொண்டு, தன் நிலையை மிகைப்படுத்தி சொல்லுபவரை மடக்குவதிலேயே கவனம் வைத்து வாழ்கிறார்களே?! ஏன்? இதற்கு என்ன காரணம்? இந்த வாக்குப்பதிவில் கிடைத்த அதிகவாக்கான, ‘மன நிலை அமைதியாக, சரியாக இருப்பதில்லை’ என்பதுதான் காரணமாகும். மனதை எப்போதுமே கொந்தளிப்பாக வைத்துக் கொள்கிறார்கள். அதாவது நீர் அடுப்பில் கொதித்து, கொந்தளிப்பதுபோல!
இதற்கு அவர்களின் வாழ்க்கைச் சூழலும், அதில் கிடைக்கும் மன உளைச்சலும் காரணம், பிறரை, பிறர் சொல்லும் விசயங்களை புரிந்து கொள்வதில் ஏற்படும் தவறும் காரணம். தான் மட்டும்தான் சரி, மற்றவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள், குழப்பவாதிகள், உண்மையற்றவர்கள், அறிவில்லாதவர்கள் என்ற கருத்தும், இவர்களை எல்லாம் திருத்திடவேண்டும் என்ற முறையற்ற வேகமும் ஒரு காரணம். இப்படிப்பட்டவர்களை நாம், தனியாக கவனம் கொண்டு திருத்திட முடியாது. முடிந்தளவில் அவர்களிடம் இருந்து விலகிக் கொள்ள முயற்சியுங்கள். இக்குணம் உங்களுக்கு இருந்தால், திருத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை இனிதாகும்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments