Ticker

6/recent/ticker-posts

Why Shanti Meditation Practice on Every Fridays?

வெள்ளிக்கிழமை மட்டும் சாந்திதவம் செய்தல் வேண்டும் என்பது ஏன்?

நம் வேதாத்திரிய சானலில், ஒரு வாக்கெடுப்பு நிகழ்ந்தது, அதில்,

வாரத்தில் ஒரு வெள்ளிக்கிழமை மட்டும் சாந்திதவம் செய்தல் வேண்டும் என்பது ஏன்?

தவ ஆற்றலை உடல் சக்தியாக மாற்றிட உதவும் 59% (சரியான வாக்கு)

இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், தினமும் தவம் செய்துவர, உடலில் சில மாற்றங்கள் வரும். அது உடல் வலியாக, தலைபாரமாக, உடல் சூடாக, உடல் தடுமாற்றமாக, உடலில் அங்கங்கே பிடிப்பதுப்போல வலியும் உண்டாகும். காரணம், இதற்குமுன்பாக இந்த தவ ஆற்றலுக்கு உடல் பழகவில்ல என்பது மட்டுமே. ஆக்கினை செய்த 3 நாட்களில் இதை உணர்ந்து கொள்ள முடியும். எனவே சாந்திதவம் கட்டாயம் செய்தாக வேண்டும்.
சாந்திதவம் தேவையில்லை என்றும், அது செய்வதே இல்லை என்பவர்கள் சிக்கலை வரவழைத்துக்கொள்கிறார்கள் அல்லது அவர்கள் ஆக்கினை தவமே செய்வதில்லை என்பது உறுதி. வெள்ளிக்கிழமை அதிபதி சுக்கிரனுக்கும், சாந்தி தவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதெல்லாம் கட்டுக்கதைதான். அதேபோல தினமும் சாந்திதவம் செய்ய தேவையும் இல்லை. தவ முடிவில் உடலை தேய்த்துவிடுதல் போதுமானது. சாந்திதவம் நமக்கு கிடைத்த வரப்பிரஷாதம் என்றால் மிகையில்லை. கண்டுபிடித்துதந்த சித்தர்களை வாழ்த்தி மகிழ்வோம்.

வாழ்க வளமுடன்.
-

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments