Ticker

6/recent/ticker-posts

Why you often get emotional and nervous? Any reason?

சிலர் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதற்கும், பதறுவதற்கும் என்ன காரணம்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 405Votes/32Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, சிலர் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதற்கும், பதறுவதற்கும் என்ன காரணம்?

ஜீவகாந்த அலையின் இருப்பு குறைவு என்பதாகிறது! 68% (சரியான / அதிக வாக்கு)

-

அன்பர்களே, இந்தப்பிரச்சனை நிறையபேருக்கு இருப்பதை, வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களைப் பொறுத்து தெரிந்து கொள்ள முடிகிறது. உண்மைதான். நம்மோடு வாழும் மனிதர்கள் பலர், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதையும், பதறுவதையும் காணமுடியும். சிலவேளைகளில் நம் வீட்டில் இருக்கும் குடும்பத்தினருக்கும் அது நிகழும். அதில் நாமும் கூட சிக்கிக்கொண்டிருப்போம் என்பதும் உண்மைதானே?! அது ஏன் நிகழ்கிறது? என்ன காரணம்?

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! ஏதேனும் ஒரு செய்தி கேட்டால், உடனே ‘ஐயோ, அப்படியா!’ என்பார்கள். ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு என்றால் ‘இவன்/இவள் ஏன் இப்படி செய்தான்/ள்?’ என்று பதறுவார்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டால் கூட ‘ஐயோ, இப்படி செய்துட்டேனே?’ என்று கவலைப்படுவார்கள். இதுபோல பலப்பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம் என்ன நினைப்போம் என்றால், ‘அடடா, இவர்/ள் இவ்வளவு இளகிய மனம் படைத்தவரோ?! இதெற்கெல்லாம் இப்படி ஆகிறாரே?’ என்றுதான். ஆனால் உண்மை வேறு. அவர்களுக்கு அந்த சூழலை தகுந்தாற்போல ஏற்கும் மனத்திடம் இல்லை. அது அவர்களை தாக்குகிறது. மனத்திடம் இல்லை என்றால், உடலும் தாங்காது. திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள். 

இதற்கு முக்கியகாரணம் என்ன? அவர்களின் உடலில் உறுப்புக்கள் செயல்பாட்டில் குறை, நோய்தாக்கம், வழக்கம், பழக்கம் என்பதாகவும் இருக்கலாம். அதையும் சரி செய்தாகவேண்டும். மேலும் இந்த மனத்திடம் என்றால், மனம் அதற்கான சக்தி இன்றி செயல்படுகிறது என்று அர்த்தமாகிறது. நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வார்த்தையில் சொன்னால், மனதின் இயக்கத்தில் ‘ஜீவகாந்தம்’ வற்றிபோய் இருக்கிறது என்பதாகும். இதை சரி செய்யமுடியுமா? முடியும்.

அதற்கென்று சில பயிற்சிகளும், நடைமுறை செயல்பாடுகளும் உள்ளது. இக்குறை உள்ளோர், மனவளக்கலை பயிற்சிகள் வழியாக தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்களை மாற்றி அமைத்துக்கொண்டு, நிறைவான, இன்பமான, அனுபவமான வாழ்வை வாழவும் முடியும்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments