வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 369Votes/22Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, பலநபர்கள் வந்துபோகும் பொது இடங்களில் தவம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?
பொது இடங்களில் தவம் செய்யாமல் தவிர்க்கலாமே! 25% (சரியான வாக்கு)
நன்கு அருட்காப்பு, இடத்தூய்மை செய்துவிடவேண்டும் 54% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, யோகத்தின் வழியாக, உயர்வதற்கு தவம் மிக அவசியம். அந்த தவம் நமக்கு என்றும், எப்போதும் நன்மை அளிப்பதாகவே இருக்கவேண்டும் என்பதும் அவசியம். குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை வழியாக தவம் கற்ற நமக்கு சூழலும் முக்கியம்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! மன்றத்திலோ, வீட்டிலோ, குழுவாகவோ தவம் செய்வதில் மிகுந்த நன்மை உண்டு. ஆனால் நமக்கு அறிமுகமில்லா இடத்திலும், பலர் வந்து போகின்ற இடங்களிலும் தவம் செய்வது கொஞ்சம் பிரச்சனைக்குறியதுதான். ஒரு வழிபாட்டுத்தலம் என்றாலும் கூட, எல்லோரும் வந்துபோவார்கள். ஒரு சித்தரின் ஜீவ சமாதியாக இருந்தாலும், எண்ணற்றோர் வருவதும் போவதுமாக இருப்பார்கள்.
இதுபோல பல இடங்கள் உள்ளன. நாம் என்ன நினைப்போம் என்றால், இங்கே தவம் செய்தால் நமக்கு நல்லது, தவம் நல்ல உயர்வை பெறலாம் என்பதாக. ஆனால் பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட எண்ணங்களை கொண்டிருப்பார்கள் என்பது உண்மைதானே?! மேலும் அத்தகைய எண்ணங்களை அங்கே பரப்பிக்கொண்டும் இருப்பார்கள் அல்லவா? அந்த எண்ணங்கள் எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை நாம் அறியவும், உணரவும் முடியாது. இதனால் நாம் அங்கே, அவ்விடத்தில் தவம் செய்யும் பொழுது, அத்தகைய மனிதர்களின் மனம் மற்றும் சூழ்நிலை அலைத்தாக்கத்திற்கு உள்ளாகிவிடுவோம்.
இத்தகைய நிலை, நம் தவ சிந்தனையை தடுக்கும். உயர்வையும் தராது. தவம் செய்தால் கூட, ஏதோ கிடைத்தது போல தோன்றலாம், ஆனால் அது நமக்குள் ஏதேனும் ஒரு பிரச்சனையைக் கூட உண்டாக்கலாம் என்பதை அறிந்து கொள்க. இப்படி பொது இடங்களில் தவம் செய்தவர்களுக்கு, சில பொருந்தாத அனுபவங்கள் கிடைத்திருக்ககூடும் என்பதே உண்மை. என்னதான் நன்கு அருட்காப்பு, இடத்தூய்மை செய்துவிட்டாலும் கூட, இந்த பாதிப்பை தவிர்க்க இயலாது. எனவே பொது இடங்களில் தவம் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது பொதுவான கருத்தாகும்.
இதென்ன இப்படி சொல்லுகிறீர்கள்? இங்கே தவம் செய்தால் அப்படி, அங்கே தவம் செய்தால் இப்படி என்று பல இடங்களில் தவம் செய்து உயர்வு பெற்றிருக்கிறேன். அன்பர்களை குழுப்பாதீர்கள் என்று நீங்கள் சொல்லலாம். சரி உங்கள் விருப்பப்படியே செய்து வாருங்கள். அது உங்கள் முடிவு!
தவம் பயிற்சியாக இருக்கும் போது தான் இடத்துக்கு பிரதானம். தவநிலையில் நிலைப்பவர்க்கு இடம் பொருட்டில்லை என்ற இந்த விளக்கத்தையும் ஒரு அன்பர் சொல்லியிருந்தார். ஆம், தவம் என்ற ஒன்றை பழகிப்பழகி, மனம் விரிந்து நின்று பழகியவர்களுக்கு எந்த இடமும் பொருட்டல்ல என்பதும் உண்மை.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments