வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 350Votes/29Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, உங்களுக்கு ஒரு பிரச்சனை எழுந்துவிட்டது என்றால் உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன?
ஏன் இந்த பிரச்சனை? எதனால் வந்தது என்று யோசிப்பேன் 43% (சரியான / அதிக வாக்கு)
இந்த பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என்று ஆராய்வேன் 40% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, கடந்த வாக்கெடுப்பில் நாம் பிரச்சனையை தாங்கிக் கொள்ளக்கூடிய தன்மை குறித்து கண்டோம். இன்று பிரச்சனை வந்தால், அடுத்த நடவடிக்கையாக என்ன செய்கிறோம் என்பதை காண்கிறோம். பிரச்சனை பெரிது சிறிது என்றில்லாமல், எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டுதான். ஆனால் நாம் அதில் சிக்குகிறோம் அல்லது உதாசீனப்படுத்துகிறோம், பிரச்சனையின் தன்மை ஆராயாமல் என்பதே உண்மை.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! பிரச்சனை தனக்கு என்றால் ஒருமாதிரியும், பிறருக்கு என்றால் வேறுமாதிரியும் இருக்கும் நபர்கள் உண்டு. சிலர் அடுத்தவருடைய பிரச்சனையிலும் தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டு முழிப்பார்கள் அல்லது முட்டிமோதி பாதிப்போடு திரும்புவார்கள். அடுத்தவருடைய பிரச்சனையில், ‘என் உதவி வேண்டுமா?’ என்று கேட்பவர்கள் மிக அரிது என்றும் சொல்லலாம்! சிலர், இவனுக்கெல்லாம் நான் ஏன் உதவனும்? என்றுதான் நினைப்பார்கள். அதுதான் அவர்களுக்கும், தனக்கென்று பிரச்சனை எழும்பொழுது, சரியான உதவி கிடைக்காமல் அடைத்துக் கொள்கிறார்கள். மனவளக்கலை என்ற உயர்கல்வியை கற்ற நாம் அப்படி இருக்கலாமா?
ஒரு பிரச்சனை எழுகிறது, எழுந்துவிட்டது என்றால், அதனுடைய மூலம் அறியவேண்டும். ஏன் இந்த பிரச்சனை? எதனால் வந்தது? என்னாலா? பிறராலா? தீர்க்கக் கூடியதா? நீடிப்பதா? தவிர்க்கலாமா? உதாசீனம் செய்யலாமா? என்று உடனடியாக ஆராயவேண்டும்.
அதன்பிறகே எப்படி இந்தபிரச்சனையை தீர்க்கலாம்? என்பதற்கான வழிகளை தேடவேண்டும். ஆரம்பத்தில் இதைகடைபிடிக்க கடினமே! ஆனால் பயிற்சியாக செய்யச்செய்ய நன்கு பழக்கத்தில் கொண்டுவந்து விடலாம். நாமும் நம் வாழ்வில், பிரச்சனையை தீர்த்துவிடலாம். மற்றவர்களுக்கும், அவர்கள் விரும்பினால், உதவியாகவும் செய்யலாம்!
முதலாவதாக, பிரச்சனை வந்துவிட்டால் ‘இந்த பிரச்சனையை உண்டாக்கியவரை ஒரு வழி செய்கிறேன் பார்’ என்று முந்திவிடக்கூடாது. பிரச்சனை வந்துவிட்டதே என்று கலங்கி மனவருத்தமோ, அழுதிடவோ கூடாது. ஓடி ஒளிந்துவிடுவதாலும் பயனில்லை. முக்கியமாக, பிரச்சனையை நன்கு புரிந்து கொள்வதற்கு அமைதியாக இருக்கவேண்டும். தடாலடியாக தீர்வோ, முடிவோ செய்துவிடவும் கூடாது. இதை ஒரு பயிற்சியாக, சின்னச்சின்ன பிரச்சனைகளில் இருந்து தொடங்கி பழகுங்கள்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
அன்பர்களே, துன்பப்படுவோருக்கு ஆறுதல் அளிக்க கூட்டுத்தவம் இயற்றி சங்கல்பம் செய்து அவர்களுக்கு உதவலாம். உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை, ஆலோசனையை கேட்டுக் கொள்ளலாம். கட்டணமில்லா சேவை!
வாட்சாப் குழு: WhatsApp Group: (குழுவின் ஒழுங்குக்கு கட்டுப்படவேண்டும்)
வாழ்க வளமுடன்🙏
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments