Ticker

6/recent/ticker-posts

Shall we change the timing on the 14 point acupressure exercise?

எளியமுறை உடற்பயிற்சியில், 14 புள்ளி அக்குபிரஷ்சருக்கு 30 நொடிக்கு அதிகமாக அழுத்தம் தரலாமா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 276Votes/21Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, எளியமுறை உடற்பயிற்சியில், 14 புள்ளி அக்குபிரஷ்சருக்கு 30 நொடிக்கு அதிகமாக அழுத்தம் தரலாமா?

உடல் உறுப்பு பாதிப்பு இருந்தால் நேரம் கூட்டலாமே 10% (சரியான  வாக்கு)

30 நொடி போதுமானது அதற்குமேல் தேவையில்லை 72% (அதிக வாக்கு)

-

அன்பர்களே,  மனவளக்கலை வழியாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், நம் உடலையும், மனதையும் ஊக்கம் தர ‘எளியமுறை உடற்பயிற்சி’ பயிற்றுவித்தார். அதில் ஒரு சிறப்பான பயிற்சியே, 14 புள்ளி அக்குபிரஷ்சர் ஆகும்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! உலகில் ஓவ்வொரு நாட்டிலும் மக்களுக்களின் நலன்காக்க உடலுக்கான பயிற்சிகளும் உண்டு. இவற்றையெல்லாம் தொகுத்து, முழுமையாக்கி, உடலை வருத்தாமல் செய்து, ஊக்கமளிக்கும் ஒர் பயிற்சிமுறைதான் ‘எளியமுறை உடற்பயிற்சி’.

இதில் ‘14 புள்ளி அக்குபிரஷ்சர்’எனும் பயிற்சியில், ஆட்காட்டி விரலாலும், கட்டை விரலாலும் உடலில் இருக்கக்கூடிய நாடிகளில் வழியில், குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தம் கொடுத்தால் அதற்குரிய பலன்கள் கிடைக்கின்றன என்பதே உண்மை. இதற்கு நாம் 30 நொடிகள் அழுத்தம் தர வேண்டும். இதுதான் அளவு என்று கற்றுத்தரப்படுகிறது. காரணம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தானும் அதை பயிற்சியாக செய்து பார்த்து, விளைவுகளை கணித்து அதன்படியே 30 நொடி என்று கொண்டுவந்தார் என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்!

ஆனாலும் ஓவ்வொருவரின் உடலின் தன்மைக்கேற்ப, அந்த 30 நொடி என்பதை கூடுதலாகவும், குறைவாகவும் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதை தகுந்த உடல்நலன் குறித்த ஆராய்ச்சி கொண்ட அன்பர்களும், நீண்டகால பயிற்சி பயனாளர்களும், அக்குபிரஷர் மருத்துவம் அறிந்த மருத்துவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும் நாமாகவே தன்னிஷ்டம் போல, கூட்டிக்கொள்வதும், குறைத்துக்கொள்வதும் கூடாது. நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தகுந்த, மனவளக்கலை ஆசிரியரிடம் கலந்து பேசி பிறகு அதை உங்களுடைய பயிற்சியில் மாற்றிக் கொள்ளலாம். இதனால் 30 நொடி என்பது கட்டாயமோ, மாற்றக்கூடாது என்று சொல்லமுடியாது!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments