Ticker

6/recent/ticker-posts

Why we describe the New Moon day is special?

அமாவாசை சிறப்பாக கருதப்படுவது ஏன்?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 350 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, அமாவாசை சிறப்பாக கருதப்படுவது ஏன்?

பூமியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது அதனால்தான் 62% (அதிக / சரியான வாக்கு)

-


அக்காலம் முதலாக, இன்றைய காலத்திலும் அமாவாசை என்பது சிறப்பாக கருதப்பட்டு வருகிறது. சிலர் அது ஒரு நிறைநாள் என்றும், சிலர் அது குறையுடைய நாள், நல்லதில்லை என்றும் சொல்லுகிறார்கள். எந்த நிகழ்ச்சிகளும் நடத்தமாட்டார்கள். அமாவாசை நாளை ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் அமாவாசை யோகத்திற்கு சிறப்பான நாளே ஆகும்!

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! மாதத்திற்கு ஒரு முறை வரும் நாளே அமாவாசை. ஆங்கிலத்தில் ‘புதிய நிலவு நாள்’ என்று குறிப்பிடுவார்கள். சூரியனின் ஒளியை வாங்கி, பூமிக்கு பகிரும் நிலவு, சுரியனின் ஒளியை பெறாத பகுதியை நமக்கு காட்டுகிறது. பூமியோடு ஓர் புள்ளியில் இணைந்திருக்கும், நிலவு தன் வட்ட சுழற்சியில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலே நிற்கும் நாள்தான் அமாவாசை. இயல்பாக நிலவுக்கு இருக்கும் ஈர்ப்பு, சூரியனால் அதிகமாகிறது. இதனால்தான் பூமியில் இருக்கும் எப்பொருளுக்கும், எவ்வுயிருக்கும் அதன் தாக்கத்தை தருகிறது. அமாவாசையில் கடலில் உயர் ஓதங்கள் ஏற்படுவதை காணலாம். மனிதர்களின் மனதோடு தொடர்பு கொண்ட நிலவு, ஒருவகை தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதும் உண்மை. 

ஆனால் யோகத்தில் இருப்பவர்கள், அமாவாசை நாளில், பஞ்சபூத நவக்கிரக தவம் செய்து உயர்வடையலாம். அதுபோல, இறை சிந்தனையிலும் இருக்கலாம். மனம் பாதிப்படையும் எதையும் செய்தல் கூடாது. அதுபோல உணவையும் ஒரு நேரமாவது தவிர்த்து, எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். அது உடலுக்கும் உதவும். இந்த வகையில், நிலவு, பூமியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே!

வாழ்க வளமுடன்! 

Thanks to: Photos and images are copyrighted to the original owners, here we used educational purpose only.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments