நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
தான் என்ற அதிகாரபற்றும், தனது என்ற பொருள்பற்றும் எப்போது வருகிறது?
திடீரென பணவசதி பெற்று உயர்பவருக்கு 62% (அதிக வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால், இத்தகைய குணம், இயல்பாக குழந்தைக்கே வந்துவிடுகிறதே! 16% (சரியான வாக்கு) காரணம். ஏற்கனவே உள்ள கர்மா எனும் வினை பதிவுகளின் வழியாக அதை, குழந்தை செயல்படுத்துகிறது. அதை ஊக்குவிப்பது, அக்குழந்தியின் பெற்றோரும், மற்றோரும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? நிச்சயமாக இல்லை. ஆனாலும், அந்தக்குழந்தை வளரும் வேளையில், ஏழை என்றால் அதை காட்டாமலும், பணக்காரன் என்றால் அதை செயல்படுத்தியும் பழகுகிறது. இவ்வேளையில் திடீர் பணக்காரனும் செய்கிறார்.
இந்த தன்முனைப்பு வழியாக, தன்னுடைய பிறப்பின் நோக்கம், கடமை அழிந்து விடுகிறது. மேலும் வாழ்வை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். அதை தகுந்த குருவின் மூலமாக அறிந்து உய்ய வேண்டும்.
வாழ்க வளமுடன்
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments