நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
முறையற்ற பால்கவர்ச்சி ‘கற்பு நெறி’ யாக மாறிட வேண்டும். அதற்கு வழி?!
ஆண் பெண் நட்புறவோடு பழக முயற்சிக்கனும் 44% (அதிக வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால்,
ஆண்கள் பெண்களை சமமாக மதித்து பழகனும்,
பால்கவர்ச்சி என்பதை பாடத்திட்டமாக்கனும்,
சினிமா, டிவி, கதை இவற்றில் தூண்டுதல் தடுக்கனும்,
பெண்கள் தன் பெருமை உணர்ந்து கொள்ளனும்.
இன்னும் நிறைய சொல்லலாம். பருவ வயதிற்கு முன்பே, ஆண், பெண் குழந்தைகளுக்கு, எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒருவரை ஒருவர் எப்படி மதிக்க வேண்டும், பாலுறவு என்பது என்ன? அதில் உண்டாகும் இன்பம் தவிர, வேறு விளைவுகள் என்ன? அதை வாழ்வில் மற்றவர்கள் பார்க்கும் பார்வை என்ன? தவறானால் ஏன் வாழ்க்கை சிதைகிறது? (மேலும் சில) என்றெல்லாம் அவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் சொல்லித்தர வேண்டியது அவசியமாகும்.
வருங்கால சந்ததியினரின் அக்கறையோடு, இதை நடத்திச் செல்ல முடிந்தவர்கள் யார்?
வாழ்க வளமுடன்.
Note: Photos are collected from internet source, copyrighted to the owners, who published on their websites.
0 Comments