Ticker

6/recent/ticker-posts

What is the twice benefit in simplified exercise?

உடற்பயிற்சி தொடர்ந்து செய்துவருவதில் கிடைக்கும், மிகச்சரியான இரண்டு பலன்கள் என்ன?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 386 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, உடற்பயிற்சி தொடர்ந்து செய்துவருவதில் கிடைக்கும், மிகச்சரியான இரண்டு பலன்கள் என்ன?

1) உடல் நலம் பெறுவதோடு 2) நல்ல தவம் செய்ய உடல் உறுதி 56% (அதிக /சரியான வாக்கு)

-

குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய, எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கம், உடலை திருத்தி அமைப்பது ஆகும். உலகில் பலப்பல உடற்பயிற்சிகள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் தொகுத்து, திருத்தி, உடலை எந்தவகையிலும் துன்புறுத்தாத பயிற்சிமுறைகளின் தொகுப்பே எளியமுறை உடற்பயிற்சி ஆகும்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! உடலில் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை போக்குவது, இனி எந்த பிரச்சனைகளும் வரமால் உடலுறுப்புக்களை பாதுகாப்பது என்பதே நம்முடைய விருப்பமாக இருக்கிறது அல்லவா? இதற்கு துணை செய்வதுதான் எளியமுறை உடற்பயிற்சி ஆகும். மேலும் தொடர்ந்து இந்த பயிற்சியில் கிடைக்கும் இரண்டு பலன்கள் 1) உடல் நலம் பெறுவதோடு 2) நல்ல தவம் செய்ய உடல் உறுதி கிடைத்திடும் என்பதாகும்.

நாம் வேதாத்திரிய யோகம் பயிலுகின்றோம். தவம் செய்ய வேண்டுமென்றால், உடல் நம்மை உறுத்தாத அளவில், தகுந்த நேரம் அமர்ந்து இருக்க நேரிடும். உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகளை வைத்துக்கொண்டு கொஞ்ச நேரமாவது அமைதியாக உட்கார முடியுமா? அது கடினமாகிற்றே. அதனால்தான், முதல் வேலையாக நம் உடலை திருத்தி, வளமாக்கிட எளியமுறை உடற்பயிற்சி முதலில் கற்றுக்கொள்கிறோம். அதன் பிறகுதான் தவம் என்றாகிறது. எனவே இதுவரை எளியமுறை உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தவில்லை என்றால், முதல் அதை மாற்றிடுக. அதன் பிறகுதான் நன்கு தவம் இயற்றவும் முடியும் என்பதை அறிக!

வாழ்க வளமுடன்! 

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments