வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 383 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, வழிபாட்டு தளங்களில், கோவில்களில் தவம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?
தராளமாக தவம் இயற்றலாம் நல்லதுதான் 72% (அதிக வாக்கு)
-
வழிபாட்டு தளங்கள், கோவில்களில் சமீபகாலத்தில், நிறைய மாற்றங்கள் உண்டாகிவிட்டன. பலதரப்பட்ட மனிதர்களின் மனம் களங்கம் அடைந்திருக்கிறது என்றே சொல்லலாம். வாழும் காலச் சூழல் அப்படி மாற்றம் கொண்டிருக்கிறது. அதனால் மனிதர்களின் மனமும் மாறியிருக்கிறது. அதனால், அதை சரிசெய்ய, தெய்வத்தின் துணைநாடியே, எல்லாமக்களும் அங்கே குவிகிறார்கள் என்பதே உண்மை.
வேதாத்திரியத்தில் பயணிக்கிற அன்பர்கள் இந்த மாற்றத்தை நன்கு உணர்ந்திருக்கக் கூடும் என்றே நம்புகிறோம். மேலும் தெய்வீகம் என்ற ஒரு நிலைப்பாடு அங்கே, வழிபாட்டு தளங்கள், கோவில்களில் ஆகமங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. கூடவே அவ்விடங்களில் இருக்கிற சித்தர்களின் ஜீவ சமாதியும் பெரும் துணை செய்கிறது.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! ஒரு உதாரணமாக, வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தில் கூட்டுத்தவம் இயற்றுவதாக இருந்தால், நமக்கு ஏதேனும் நோக்கமோ, எதிர்பார்ப்போ இருக்குமா? நிச்சயமாக எதுவுமே இருக்காது. அங்கே தவத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைக்கும். அது அடுத்தடுத்த நிலைக்கு உயர்வையும் உருவாக்கித்தரும் என்பது உண்மை.
இங்கே, வழிபாட்டுத்தளம், கோவில்கள் ஏன் உருவானது என்ற காரணமே, யோகத்தில் இணையாத மக்களுக்கு உதவும் பொருட்டே என்பதும் நமக்குத் தெரியும் அல்லவா? நாம் நேரடியாக யோகத்தில் இருக்கிறோம். எனவே, அங்கே தவம் இயற்றுவதன் காரணம், தவத்தின் வழியாக, அங்கே இருக்கிற மூல ஆற்றலோடு ஒரு தொடர்பு உண்டாகும் என்பதால்தான். ஆனால் அங்கே வருகிற பலதரப்பட்ட மக்களின் மன அலைச்சுழல், இயல்பாக இருக்கிற நம் மனதை பாதித்துவிடும். இதனால் நமக்கும் மனம் அலைபாயும், ஆரம்பத்தில், நாம் தவத்தில் ஒன்றிட வழி இருக்காது. ஆனால் அதையும் மீறி, நாம் அங்கே இருக்கிற மூல ஆற்றலோடு இணையும் வாய்ப்பு உருவாகிவிடும். ஏதேனும் ஒரு வகையில் அந்தத்தவம் நமக்கு நன்மை அளிக்கும். நம் யோக சாதனைக்கு உதவும்.
இந்த விளக்கத்தில் சந்தேகம் இருந்தால், மீண்டும் ஒருமுறை, ஆராய்ந்து பார்த்தறிய, வழிபாட்டு தளங்களில், கோவில்களில் தவம் செய்து உண்மை உணர்ந்து பாருங்கள்!
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments