-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ஆக்கினை தவத்திற்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்?
ஆக்கினை நன்கு அமைந்தால்தான் அடுத்தது சிறப்பு 47% (அதிக / சரியான வாக்கு)
-
குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய, வேதாத்திரிய எளியமுறை குண்டலினி யோகா பயிலும் நமக்கு, தீட்சை பெற்றுக்கொண்ட நாள்முதலாகவே ஆக்கினை என்பது தவத்தில் அமர்ந்த உடனே வரக்கூடிய நிலை ஆகும். அந்த அளவிற்கு நாம், இந்த ஆக்கினை நிலையை சரிவர பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாகவே, யோக சாதனையில் ஆக்கினை, இறையுணர்வுக்கும் தன்னையறிதலுக்கும் வாசல் 22% (கூடுதல் வாக்கு) என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குண்டலினி எனும் மகாசக்தியை, ஆக்கினைக்கு உயர்த்தி, நிறுத்தி தவம் செய்வது மிகச்சிறப்பு. மேலும் எத்தவம் செய்தாலும் கூட முதலில் ஆக்கினையில் நன்கு உணர்வை பெற வேண்டியது அவசியம். அந்த நிலைதான் அடுத்தடுத்த தவ நிலைகளுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்!
இதற்கு மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஆக்கினையில் மனமும் உடலும் ஒழுங்கு அமையும் 15% (கூடுதல் சிறப்பு வாக்கு) என்பதாகும். உங்களுக்கு பிற ஆர்வக்கோளாறு மனிதர்களால், இணையத்தில் பகிரப்படும் ஆக்கினை சக்கரம் குறித்தான கட்டுக்கதைகளை முதலில் நம்பாதீர்கள். அவைகளை உடனடியாக புறம்தள்ளி விடுங்கள். இன்னமும் அறியாமையில் சிக்கிடாதீர்கள். அவர்கள் அனுபவசாலிகள் அல்ல. பெரும்பாலும் அவர்கள் ஏட்டுச்சுரைக்காய் தான். ஆனால், உங்கள் கையில் ஏற்கனவே மதிப்பு மிக்க பொருள் இருக்கையில், அதை நழுவ விடாதீர்கள்.
ஆக்கினை சிறப்பாக உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், தகுந்த மனவளக்கலை ஆசிரியரிடம் ‘மறுதீட்சை’ பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.
இன்றைய வாக்கெடுப்பில், ஓவ்வொரு அன்பரும் தகுந்த அனுபவத்தை தங்களின் வாக்காக கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இன்னும் பலர் இந்த அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments