Ticker

6/recent/ticker-posts

What a benefit if you joined in yoga before marriage?

திருமணத்திற்கு முன்பே யோகத்தில் இணைந்தால் என்ன நன்மை?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 347Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே,  திருமணத்திற்கு முன்பே யோகத்தில் இணைந்தால் என்ன நன்மை?

நல்ல வாழ்க்கைத்துணை அமைந்து வாழ்வு சிறப்பாகும்.  14% (சரியான வாக்கு)

குழந்தைகளுக்கு கர்ம வினைகள் குறைந்திடும் 63% (அதிக வாக்கு)

-

ஒவ்வொரு மனிதனுக்குள்ளாகவும் கர்மா இருக்கிறது. இந்த கர்மாக்களை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிய கர்மா என மூன்றாக அழைக்கப்படுகிறது. கர்மா என்றால் வினைப்பதிவுகள் என்று விளக்கம் தருகிறார் நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இந்த வினைப்பதிவுகளை குண்டலினி யோகத்தின் வழியாகமட்டுமே முழுமையாக தீர்த்து தூய்மை செய்திட முடியும். 

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! இந்த மூன்று கர்மா வினைகளின் தாக்கத்தால் அன்றாடம், நம்முடைய பிறவியின் நோக்கமும், கடமையும் திசைமாறுகிறது. அதனால்தான் இயற்கையோடு ஒன்ற முடியாமல், துன்பச் சிக்கலில் சிக்கித்தவிக்கிறோம் அல்லவா? இதை காலத்தால் முற்றாக தீர்த்திடவே நாம் உலகில் பிறந்தோம். ஆனால் அந்த நோக்கம் மறந்து மறுபடியும் கர்மாவை அதிகப்படுத்திக் கொள்கிறோம்.

பருவ வயதின் ஆரம்பத்தில், யோகத்தில் தன்னை இணைத்துக் கொண்டால், மிக மிக நல்லதே. என்றாலும் கூட திருமணத்திற்கு முன்பாகவே யோகத்தில் இணைந்தால், தன்னுடைய கர்ம வினைகளின் அளவை ஓரளவு தீர்த்து, வரக்கூடிய சந்ததியான குழந்தைகளுக்கு அதிக தாக்கம் இல்லாத நிலையை உருவாக்கமுடியும். இதற்கு பெரும் உதவியாக, வரக்கூடிய வாழ்க்கைத் துணையும் அமைவார் என்பது உறுதி. ஏனென்றால் இயற்கையின் விதியமைப்பு அப்படித்தான் இருக்கிறது. நாம் நன்மை நோக்கி நகர்ந்தால், இயற்கையும் நமக்கு உதவுகிறது. மேலும் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை இனிதாகும் 7% என்பது கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments