யோகத்தில் ஒருவர் தானாக இணைந்துகொள்ள தடையாக இருப்பது...
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 183 Votes / 15 Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குகள் என்ன? என்பதை காண்க!
யோகத்தில் ஒருவர் தானாக இணைந்துகொள்ள தடையாக இருப்பது...
பக்தி மார்க்கத்தில் அவருக்குள்ள அதீத ஈடுபாடுதான் 32% (அதிக வாக்கு)
வாழ்க்கை அனுபவிக்க முடியாமல் போகும் என்ற பயம்தான் 23% (சிறப்பு வாக்கு)
அப்படியென்ன பெரிதாக கிடைத்துவிடும் என்ற அவநம்பிக்கைதான் 23% (சிறப்பு வாக்கு)
யோகம் குறித்த தவறான பழங்கால தகவல்கள்தான் 14%
குடும்பத்தில் இருப்போருக்கு யோகம் கூடாது என்பதுதான் 9%
-
அன்பர்களே,
இந்த உலகம் மனிதர்கள் சந்தோசமாக, இன்பமாக, அனுபவத்து வாழ்வதற்காகவே உண்டானது என்ற ரீதியில்தான், பெரும்பாலான மனித சமூகம் நினைத்து வாழ்ந்து வருகிறது. ஆனால் உண்மையிலேயே அவர்கள் சொல்லுகிற சந்தோஷம், இன்பம், அனுபவமான வாழ்வு இருக்கிறதா? என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு பதில் அவர்கள் சொல்லாமலேயே, நமக்கும் தெரிந்துவிடும். இந்த நிலையில் யோகம் தீர்வா? என்ற கேள்வியும் எழும் அல்லவா? ஒரு மனிதனின் பிறப்பு, தன்னையறிதலில் தான் உருவாகிறாது. ‘நான் யார்?’ என்ற் கேள்வியை கேட்டு அதற்கான விடை அறிவதில்தான் முற்றுப்பெறுகிறது. அந்த கேள்விக்கான பயணம் யோகத்தால்தான் நிகழ்கிறது. ஆனால் வாழும் மனிதனுக்கு ‘நான் யார்?’ என்று கேட்பதற்கான அவகாசமே இல்லை.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
நாம் வாழ்கின்ற இந்த உலகம், பூமி நமக்கு மட்டுமே சொந்தமல்ல, பஞ்சபூதங்களுக்கும், இயற்கைக்கும், புல் முதலான அத்தனை தாவர இனத்திற்கும், புழு முதல் யானை வரை எல்லாவிதமான ஜீவன்களுக்கும் சொந்தமானதுதான். இவைகள் இல்லாமல் நாமும் இல்லை. அந்த ஜீவன்களின் தொடர்ச்சியில் எழுந்த, பரிணமித்த முழுமைதான் மனிதர்களாகிய நாம் என்பதை மறக்கக்கூடாது. அந்த முழுமையை என்னவென்று அறிந்து கொள்ளவே யோகம் உதவுகிறது. ஆறாவது அறிவின் எழுச்சி, எதற்காக என்ற உண்மையும் அதுதான். தானும், இந்த ஜீவன்களும், இயற்கையும், பிரபஞ்சமும், பஞ்சபூதங்களும் உண்மையில் என்ன? என்பதற்கான கேள்விதான் இந்த ‘நான் யார்?’ ஆகும்.
மற்றவர்களைப் பார்த்து ‘நீ யார்?’ என்றுதான் கேட்டுக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாகவே மெய்ப்பொருள் அறிந்த ஞானிகள், அந்தந்தக்கால மக்களின் அறிவுநிலை தகுந்த நிலையை கருதி, எளிமையாக பக்தி வழியில், யோகத்தின் எளிமையை புரியவைத்தார்கள். கண்ணும் கருத்துக்கும் எட்டாத தெய்வ நிலையை, யோகத்தில் உணர்ந்து கொள் என்றும் அழைத்தார்கள். ஆனால், மக்களோ இன்றுவரை பக்தியில் நின்று விட்டார்கள். அதனால் யோகம் தேவையில்லாததாக மாறிவிட்டது. ஆனால், நாம் இங்கே, யோகத்தில் இருக்கிறோமே? என்றால், அது நம் முன்னோர்களின் விருப்பம் நிலைபெற்று, நமக்கு கிடைத்துவிட்டது. அவர்களின் விருப்பத்தை நாம், நிறைவேற்றிவிட்டோம்.
இனி இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை பார்க்கலாம். யோகத்தில் ஒருவர் தானாக இணைந்துகொள்ள தடையாக இருப்பது...
பக்தி மார்க்கத்தில் அவருக்குள்ள அதீத ஈடுபாடுதான் 32% (அதிக வாக்கு) மக்களின் இந்த தேர்வு, இன்னமும் பக்தி மக்களை, யோகத்திற்கு வரவிடாமல் பிடித்துக்கொண்டிருப்பதை நமக்கு அறியத்தருகிறது. இத்தகைய பக்தர்கள் யோக கருத்துக்களை ஏற்றாலும் கூட, பக்தியை விட்டுவிட்டு வரமாட்டார்கள் என்பதுதான் உண்மை. அடுத்து, வாழ்க்கை அனுபவிக்க முடியாமல் போகும் என்ற பயம்தான் 23% (சிறப்பு வாக்கு) பக்தியில் முழுமையில்லாது, எந்த ஆராய்ச்சியும் இல்லாமல், இருக்கும் நபர்கள் வாழ்க்கையை?! இழக்க விரும்பமாட்டார்கள். யோகம் சிறப்பாகவே இருக்கட்டும் எனக்கு வேண்டாம் என்பார்கள். அப்படியென்ன பெரிதாக கிடைத்துவிடும் என்ற அவநம்பிக்கைதான் 23% (சிறப்பு வாக்கு) பக்தி வீண், கடவுளும் இல்லை, தெய்வமும் இல்லை என்று நினைப்பவர்கூட இந்த நிலையில்தான் இருப்பார். நமக்கு எதற்கையா யோகம் என்று தட்டிக்கழித்தும் விடுவார். எனக்கு அது தேவையில்லை, ஆளைவிடு என்று நகர்ந்தும் விடுவார்.
யோகம் குறித்த தவறான பழங்கால தகவல்கள்தான் 14% மற்றும் குடும்பத்தில் இருப்போருக்கு யோகம் கூடாது என்பதுதான் 9% (பொதுவான வாக்கு) பழங்கதைகளை அப்படியே ஏற்று, சூழலுக்கு தகுந்தபடி மாறிக்கொள்ளும் நபர் இதைத்தான் சொல்லுவார்கள். இவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களைச் சார்ந்தவர்களையும், தன் குடும்ப உறுப்பினர்களையே கூட உண்மையை அறிய விடாமல் தடுத்துவிடுவார். தன்பிறவியையும், அவர்களுடையை பிறவியையும் வீணாக்கிவிடுவார் என்பது சோகம்.
சரி, அப்படியானால், இவர்களை என்ன செய்வது? எப்படி யோகவழிக்கு திருப்புவது? நாம் சொன்னால் ஏதோ கேட்பார்கள் என்றால் சொல்லலாம். ஏற்க மறுப்பவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதான். நிச்சயமாக அவர்களுடைய வாழ்வில், ஒரு பாடம் நிகழும். அதன்வழியாக யோகம் நோக்கி நிச்சயமாக வருவார்கள். நாம் காத்திருக்கலாம்.
வேதாத்திரிய வாக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
0 Comments