Ticker

6/recent/ticker-posts

Maharashanam in Vethathiriya Simplified Exercise

வேதாத்திரிய எளியமுறை பயிற்சியில் மகராசனம்!


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 121votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

அன்பர்களே, நீங்கள் மகராசனம் ஏன் செய்வதில்லை? என்றால் உங்கள் பதில்?

அது என்னாலே புரிந்து செய்யமுடியலைங்க! 38% (அதிக வாக்கு)

நாம் இந்த வாக்குப்பதிவில், செய்கிறீர்களா? என்று கேட்பதற்காக ‘ஏன் செய்யவில்லை’ என்று கேட்டோம். காரணம் ‘மகராசனம்’ என்ற பயிற்சிக்கு பெரும்பாலானோர் அக்கறை செலுத்துவதில்லை என்று அறிகிறோம்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! இதுவரை உடலை சரியாக பராமரிக்காதவர்கள், உடற்பயிற்சி என்பதை அவசியமாக நினைக்காதவர்கள், வழக்கமான வேலை, அலுவல் என்றே நாட்களை கடத்துவோர், கொஞ்சம் வயதானவர்கள் ஆகியோருக்கு ‘மகராசனம்’ கடினமே. ஆனால் கற்றுக்கொள்ளும் பொழுது ஆர்வமாக இருப்பார்கள். அதன்பிறகு தனியாக தொடர்ந்து செய்யவேண்டும் என்ற நிலை வரும்பொழுது, அதைத்தவிர என்ற மற்றதெல்லாம் என்று மகராசனத்தை விட்டுவிடுவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 1) அது செய்தால் என்ன ஆகுதுன்னு தெரியலை 2) அப்படி இப்படி முறுக்க கஷ்டமா இருக்குங்க 3) உடம்பூரா வலி, இதை செய்தால் இன்னும் வலி 4)எப்பவுமே செய்றதில்லையே புதுசா என்ன? என்பார்கள்.

மகராசனம் பயிற்சியின் பலன்கள் அளப்பறியது. தனியாக ஒரு முழுபதிவாக, நம் வேதாத்திரிய சானலில் தருகிறோம். இதை படிக்கும் வேறு யாரெனும் ஒருவர், இக்கருத்தை திருடி, இப்பயிற்சி பற்றிய விளக்கத்தை, எமக்கு முன்னே தந்தாலும் தருவார்கள். ஏனென்றால் அப்படி நிகழ்கிறது என்பதே உண்மை. இதுதான் அறிவுத்திருட்டு. தனியாக சிந்திக்காமல், யாரேனும் சொல்லுவதை தானே சொல்லுவதாக மாற்றிக் கொள்வது. ஆனால் அறிவை ஏற்று பகிர்வது தவறல்ல. எப்போது? இக்கருத்து இங்கிருந்து, இவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது என்று ஒரு விபரம் சொல்ல வேண்டும். அதை சொல்லவில்லை என்றால் அது அறிவுத்திருட்டே ஆகும்!

மகராசனம், நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, ஒருங்கிணைத்த பயிற்சியாகும். இதன் பலன் என்ன என்பதை, தன் ஆராய்ச்சியில் பிறருக்கு கற்றுக்கொடுத்த பிறகு, அதன் விளைவுகளைக் கொண்டு திருத்தி நமக்கு ‘எளிய முறை உடற்பயிற்சியில்’ தந்துள்ளார். இந்த மகராசனம், ஒரு மனிதனின் ஆதாரமான  முதுகுத்தண்டு  எலும்புகளை, அடிப்படையாகக் கொண்டது. அடிப்படை பயிற்சியில் கற்றுக்கொண்ட நீங்கள், தொடர்ந்து செய்யவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். உங்கள் சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெற்று, மகராசனம் செய்க. உடலை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை கொள்க. மகராசனம், தொடர்ந்து செய்துவரும்பொழுது, அதற்கான மாற்றத்தை உடல் உணர்ந்து, உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக்கும் என்பதே உண்மை. இனியும் தாமதிக்காமல் தொடர்க.

வாழ்க வளமுடன்!

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments