Ticker

6/recent/ticker-posts

No need to become a Maha Samati or Jeeva Samati

மஹா சமாதியும், ஜீவ சமாதியும் இனி தேவையில்லையா? ஏன்?


நம் வேதாத்திரிய சானலில், ஒரு வாக்கெடுப்பு நிகழ்ந்தது, அதில்,

வேதாத்திரி மகரிஷி நினைவு நாள் (28 மார்ச்). இந்நாளை மகாசமாதி என்று அழைக்கலாமா? மகாசமாதி என்பது தவறு, வான்காந்தத்தில் நிறைந்தார் 69% (சரியான வாக்கு)

பெரும்பாலான அன்பர்கள் சிறப்பாக வாக்கு தந்துள்ளனர். உண்மையை உணர்ந்ததற்கு நன்றி. நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, ஒருபோதும் ‘ஜீவ சமாதி, மகாசமாதி’ யை ஏற்றுக்கொண்டவர் இல்லை. உயிரை உடலிருந்து பிரிக்காமல், உடலுக்குள்ளேயே நிறுத்தும் அக்கலை வேண்டாம் என்றார். அக்காலத்தில் சித்தர்கள் நிலைத்து நின்றார்கள் என்றாலும், இனி அப்படி தேவையில்லை. வாழும் காலத்திலேயே எல்லா மக்களும் பயன்பெற உதவி, அம்மக்களை உயர்த்தினால் போதுமானது. ஜீவசமாதி/மகாசமாதி என்று மாறித்தான் உதவவேண்டும் என்பதில்லை என்பதே கருத்தாக நின்றிருக்கிறது. இந்த உண்மையை மக்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இயற்கையாக வந்த இந்த உடலை மகரிஷி இயற்கைக்கு கொடுத்துவிட்டார். பஞ்ச பூதங்களோடு பகிர்ந்து கொண்டார். தன்னை இறைநிலை உணர்ந்த அந்த நிலையோடு, வான் காந்தத்தில் கலந்து, தன்னுடைய அன்பர்களுக்கு தவத்திலும், ஆராய்ச்சியிலும், பிற மக்களுக்கும் உதவுகிறார் என்பதே நாம் அறிந்த உண்மை. அதுவே எம் வாழ்விலும் நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டும் உள்ளது.

வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments