நம் வேதாத்திரிய சானலில், ஒரு வாக்கெடுப்பு நிகழ்ந்தது, அதில்,
ஒவ்வொரு நாளும் இரவு உறக்கம் என்பதை 10:30 மணிக்குள் வைத்துக்கொள்வேன். ஏன்?
உடல் உறுப்புக்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்திடுமே 53% (சரியான வாக்கு)
இதை இன்னும் விளக்கமாக சொல்லுவதென்றால்,
உடலைக்கொண்டுதான் நாம் உயிர் வாழ முடியும். எனவே இந்த நமக்கான, இந்த உடலை கவனமாக பார்த்துக் கொள்வதும், அதை பராமரிப்பதும் முக்கியம். இக்காலத்தில் ஒரு மொபைல், பைக், கார் இப்படியான பொருளுக்குத் தரும் மரியாதை கூட தன் உடலுக்கு யாரும் கொடுப்பதில்லை.
மேலே உள்ள விளக்கப்படத்தை கவனித்தால், சில உண்மைகள் உங்களுக்கு புரியலாம். வழக்கமாகா இரவு 9 மணிக்கு ஆரம்பிக்கின்ற, உடலின் வெப்ப நிலை சமன்பாடு தானாக நிகழ்கிறது. இது மிகச்சரியாக, நம் நம்மை, நம் உடலை ஓய்வுக்கு தருகின்ற நேரம் எனலாம். அதிகாலை 4 மணிக்கு நுரையீரல், புத்துணர்ச்சியோடு இயங்க தயாராகும் பொழுதே சிலருக்கு விழிப்பு வந்துவிடும். அதிகாலை 4.30 மணிக்கு விழிப்பு வந்தால், அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆஹா, நானும் இயற்கையும் ஒன்றாக விழிக்கிறோமே! என்று ஒரு துள்ளல் வரலாம்!
6 மணி முதல் 7 மணி என்பது காலைக்கடன் தீர்க்கும் நேரம். அதாவது பெருங்குடலுக்கான நேரம் அது! இப்படி ஓவ்வொன்றாக நீங்களே பார்த்தும் அறியலாம்!
உடலின் ஓவ்வொரு உறுப்பும், தனக்கான வேலை நேரமும், ஓய்வு நேரமும் பெற்றுள்ளது. அந்த ஓய்வு நேரமே தூக்கம். எனவே அதை தவிர்க்கவோ, தள்ளி வைக்கவோ கூடாது. மீறினால் உடலுறுப்புகளின் தன்மை மாறிவிடும். அது நோய்தாக்கம் பெறும். அதைப்புரிந்து கொண்டு, இரவு 10 மணி முதல், தூங்க ஆரம்பித்தால், இயல்பாகவே அதிகாலை 4.30 அல்லது 6 மணிக்கோ விழிப்பு வந்துவிடும். இயற்கை உங்கள் ’செட்டிங்க் அலாரம்’ விட சிறப்பாக வேலை செய்யும். இனிமேலவது முயற்சி செய்யுங்கள்!
இரவு 10.00 மணிக்கு படுக்க என்ன செய்வது என்றா கேட்கிறீர்கள்?! சரிதான். நான் வந்து உங்களுக்கு படுக்கை விரித்து படுக்கவைத்து தாலாட்டு பாடவேண்டியதுதான்!
வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments