வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 406votes.
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, குண்டலினி என்பதே பொய் என்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
உடலெங்கும் பரவி ஓடும் உயிராற்றலின் மையம் அது 76% (சரியான / அதிக வாக்கு)
வேதாத்திரிய அன்பர்கள் மட்டுமேதான் இந்த 76% வாக்கை அளித்திருப்பார்கள் என்று நம்பலாம். அதிலும் கூட சில ஆரம்ப நிலை அன்பர்கள், அதை கைவிட்டு விட்டோர்க்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள் என்பதும் உண்மையே.
உலகில் பெரும்பாலான யோக அமைப்புக்கள் ‘குண்டலினி’ என்பதை மையப்படுத்தியே மக்களிடம், தங்கள் சேவையை கொண்டு சேர்க்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வாழும் நமக்கு, பல்லாயிர ஆண்டுகளாக சித்தர் பெருமக்களால், ‘குண்டலினி’ இன்றும் நிலைத்திருக்கிறது என்பது உண்மை. இங்கிருந்துதான் பிறநாடுகளுக்கு பரவியது என்பதும் உண்மையே. சீன நாட்டில் இந்த குண்டலினி சக்தியை ‘உடலுக்குள் ஓடும் சக்தி’ என்று அழைக்கின்றனர். ஆனால் அதில் அவர்கள் கொண்டுள்ள கருத்து, நம்முடைய கருத்துக்கு வேறானதுதான். சில மேற்கத்திய நாடுகளில் இங்கிருந்து சென்ற ஞானிகளாலும், மகான்களாலுமே குண்டலினி என்பது குறித்து விபரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் 100:1 என்றுதான் ஏற்றுக்கொள்வார்கள். தத்துவஞானிகளும், தன்னம்பிக்கை குறித்து எழுதி பேசுவோரும் ‘குண்டலினி’ இருப்பதாக நம்பவில்லை. அது மூட நம்பிக்கை என்றே சொன்னார்கள், சொல்லி வருகிறார்கள். நம் நாட்டிலும் பலர் இன்னமும் நம்பவில்லை. பக்தியில் இருப்போருக்கு அதில் அக்கறை இல்லை. கடவுளே இல்லை என்போருக்கு சுத்தம்!
விஞ்ஞான வளர்ச்சி மூட நம்பிக்கைகளை தகர்க்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது எல்லாவற்றிக்கும் ‘திடசான்று ஆதாரம்’ கேட்கிறதே?! குண்டலினிக்கு ஏது? மனதிற்கு ஏது? உயிருக்கு ஏது? ஜீவகாந்ததிற்கு ஏது? இறைநிலைக்கு ஏது?
எனவே குண்டலினி என்பதே பொய் என்பவர்களுக்கு, உங்கள் பதில் ‘நீயேதான் அது உண்மையா? பொய்யா என்பதை உணர்ந்தறிய வேண்டும்’ என்ற பதிலை தந்துவிடுங்கள்! அதை விளக்கிச்சொல்லி அவர்களிடம் உங்கள் நேரத்தையும், அனுபவத்தையும் வீண் செய்ய வேண்டாம்.
தான் தொலைத்த பொருளை, தானே தேடி கண்டடையட்டும்.
வாழ்க வளமுடன்!
Thanks to: Images are copyrighted to original owners, here we used to education purpose only
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments