வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 348votes. (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.
அன்பர்களே, நாடி சுத்தி செய்வதால் ஏற்படும் பலன் என்ன?
சுழுமுனை நாடி சிறப்பாக செயல்பட உதவும் 57% (சரியான / அதிக வாக்கு)
பெரும்பாலோர், நம் வேதாத்திரிய அன்பர்களும் கூட, நாடி சுத்தி என்பதை, பிரணாயாமம் என்றே கருத இடமிருக்கிறது. ஆரம்பகாலத்தில், தவம் இயற்றுவதற்கு முன்னால் இப்பயிற்சி இல்லை. ஆனால் நாடிசுத்தி, அன்பர்களுக்கு நல்லவகையில் உதவும் என்பதற்காக இணைக்கப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.
நம் எல்லோருக்கும் இடகலை, பிங்களை வழியாக, அதாவது மூக்கின் இரு துவாரங்கள் வழியாகவே மூச்சு ஓட்டம் ஓடும். இது குறிப்பிட்ட நாளில், நேரங்களில் இடது, வலது என மாறியும் ஓடும். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. குண்டலினி யோகம் எனும் பயணத்தில் இருக்கிற நாம், இந்த ஓட்டத்தினை ஒழுங்குபடுத்தி, சீராக்கி, சுழுமுனை நாடியாக மாற்ற வேண்டும். அதுவே தவத்தில் நாம் சிறக்க உதவும். பல்வேறு காரணங்களால், சிலருக்கு தவம் இயற்றும் நேரத்தில் சுழுமுனை இயங்குவதில்லை அல்லது தாமதமாகும். அதை ஊக்குவிக்கும் ஒரு பயிற்சியே இந்த ‘நாடி சுத்தி’ ஆகும்.
மேலும் தவம் இயற்றும் நேரம் மட்டுமில்லாமல், சாதாரணமாக இருக்கும் பொழுதும், நாடி சுத்தி செய்துவரலாம். அது உடலுக்கு நன்மை தரும். என்ன நன்மை என்பதை, சொல்வதை விட நீங்களே, செய்து உணர்ந்தால் நன்கு அனுபவமாக அமையும். இந்த நாடி சுத்தி பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது. 10க்கு மேல் செய்வதால் தவறாகிவிடாது, உங்களுக்கு தேவையான அளவில் நேரத்தில் செய்யலாம். ஒரு கட்டுப்பாடும் இல்லை.
எப்படி செய்வது? உங்களுக்கு மனவளக்கலை மன்றத்தில் எப்படி சொல்லித்தரப்பட்டதோ அதன்படியே செய்க!
வாழ்க வளமுடன்!
-
Thanks to: Images are copyrighted to original owners, here we used to education purpose only
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments