Ticker

6/recent/ticker-posts

Is Kayakalpa yoga exercise fix the basic problem?

உங்கள் உடலில் சில பிரச்சனைகள், மனக்கசப்பு இவற்றை தீர்க்க காயகல்ப யோக பயிற்சி உதவுகிறதா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 353votes.

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

அன்பர்களே, உங்கள் உடலில் சில பிரச்சனைகள், மனக்கசப்பு இவற்றை தீர்க்க காயகல்ப யோக பயிற்சி உதவுகிறது என்பது உண்மையா?

ஆம், என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன் 67% (சரியான / அதிக வாக்கு)

நிச்சயமாக காயகல்ப யோக பயிற்சி, தொடர்ந்து செய்துவருவோர் நல்ல மாற்றத்தை உணரமுடியும். முன்னை இருந்ததை விட, எந்த அளவிற்கு உடலும் மனமும் ஏற்றம் பெற்றிருக்கிறது என்பதை, வார்த்தையால் சொல்ல முடியாவிட்டாலும், அதை உணர்வார்கள்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! முதலில் உடல் பிரச்சனை என்றால் என்ன? அடிக்கடி உடல் சோர்வு, வலி, தூக்கமின்மை, கை கால் மூட்டுக்களில் வலி, கண் எரிச்சல், சதைகளில் உறுத்தலும் எரிச்சலும், உடலில் சூடு போன்றவை ஆகும். இவையெல்லாம் நோய் அல்ல, ஆனால் நோய்க்கான அறிகுறிகள் என்பதை மாற்று கருத்தில்லை. அதுபோல மனக்கசப்பு என்றால், உற்சாகமின்மை, படபடப்பு, கவலை, நம்பிக்கையின்மை, ஆர்வமின்மை போன்ற உணர்வுகளை சொல்லலாம். இதெல்லாம் மருந்தால் குணமாகும் என்று சொன்னாலும் கூட, இதற்கான அடிப்படையை சரி செய்தால் போதும்தானே? அதைத்தான் காயகல்ப யோக பயிற்சி செய்கிறது.

நாம் வாழ்வதற்கு அடிப்படையான, ஜீவகாந்த ஆற்றல், உயிராற்றல், வித்துநாத ஆற்றல் இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்துக் கூடியது, குருமகான் தந்த காயகல்ப யோக பயிற்சி, பல்லாண்டு கால ஆராய்ச்சியில் கண்ட சித்தர்களின் வரம் ஆகும். ஆர்வமாகவும், சரியாகவும், தொடர்ந்தும் செய்பவர்களுக்கு உதவக்கூடிய பயிற்சி. இதை சரியாக புரிந்துகொள்ளாத வரை, 1) ஏங்க, இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு?! 2) மருந்து யூஸ் பண்ணாம, டாக்டர் கிட்ட போகாம எப்படிங்க தீரும்?! 3) ஐயா, இப்படியெல்லாம் சொல்லி மக்களை முடக்காதீர்கள் 4) சில நேரம் அப்படித்தான் தோன்றுகிறது ஆனால் சந்தேகமே! என்றுதான் சொல்லத்தோன்றும்.

ஆனால், காயகல்ப யோக பயிற்சி இன்னும் பல நன்மைகளை தரவல்லது என்பதே உண்மை! உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரிடம் மீண்டும் கேட்டுப்பார்த்து உறுதி செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்!

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments