Ticker

6/recent/ticker-posts

Have you get the expecting post on the Vethathiriyam?

 வேதாத்திரிய பதிவுகளில் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கிறதா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 308 Votes/37 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, வேதாத்திரிய பதிவுகளில் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்கிறதா?

நிச்சயமாக கிடைக்கிறது உண்மை 88% (அதிக வாக்கு)

எப்போதாவதுதான் சரியானது கிடைக்கும் 4% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரிய தத்துவங்களை, வேதாத்திரிய யோகவழி என்ற பெயரில், மனவளக்கலையில் பயின்ற வேதாத்திரிய அன்பர்களாகிய, உங்களுக்காக வழங்கி வருகிறோம். 

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! 

யோகம் என்ற மிக உயர்ந்த வாழ்க்கை விளக்கத்தை நாம் பெற்றுள்ளோம். அதுவும் எளியமுறை குண்டலினியோகமான ‘மனவளக்கலை’ வழியாக! பொதுவாகவே, நாம் கல்வி கற்கும் பொழுது, கேள்விகள் எழுவதில்லை. பாடத்தில் என்ன கேள்வி எழுமோ அதை கேட்டு திருத்தம் பெற்றுக்கொள்வதோடு சரி. ஆனால் கற்றுக்கொண்டதை, நாம் ஏற்று செயல்படுத்தி பார்க்கும் பொழுதுதான், சிந்தனைக் கேள்வியும், ஆராய்ச்சிக்கான கேள்வியும் எழும்.

இந்த நேரத்தில், எங்கே கற்றுக்கொண்டோமோ? யாரிடம் கற்றுக்கொண்டோமோ? அங்கேயோ, அந்த ஆசிரியரிடமோ கேட்டு தெர்ந்து கொள்ள ஒரு சிலருக்குத்தான் வாய்ப்பு அமையும். மற்றோர், வேறேங்கே தூரத்தில் இருக்கலாம், பணி காரணமாக சந்திக்க முடியாத சூழல் இருக்கலாம், கடல் கடந்த வெளிநாடுகளிலும் இருக்கலாம்.

இப்படியானவர்களுக்கு, துணையாக அமைவது, ஏற்கனவே கற்றுத்தேர்ந்த அனுபவசாலி, ஆசிரியர், ஆராய்ச்சியில் தெளிவு பெற்றோர், கேட்டதை பெற்றதை அப்படியே பகிர்வோ, வேதாத்திரியத்தில் உன்னத நிலை அடைந்தோர் மூலமாகவும், அந்த சந்தேகங்களை தீர்க்க முடியும். தற்போதைய காலம், அந்த வாய்ப்பை ‘இணையம்’ மூலமாக எல்லோருக்கும் தடையின்றி வழங்கி வருகிறது. கேள்விகள் எத்தனை இருந்தாலும், அதற்கான பதில்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும், அன்பர்களின் ஆர்வத்தை தூண்டி, தொடர்பில்லாத பதிலை தரும் ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அப்படியான தொடர்பில்லாத, தவறான பதில்களை, தவறான பதிவுகளை அன்பர்கள் ஆராய்ந்து பார்த்து, சரியானதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், ஒரு அன்பர் கேட்ட, எதிர்பார்க்கும் கேள்விக்கான பதில் கிடைக்கிறதா? என்பது கொஞ்சம் சிக்கலானதே! ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இருக்கலாமே தவிர, என் கேள்விக்கு பதில் உண்டா? என்பது கொஞ்சம் கடினமே! அதைமீறியும், தகுந்த பதில் கிடைக்கிறது என்றால் அது, அதிசய நிகழ்வாகவே எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அன்பர்கள் வாக்களித்த, ‘ஆம், நிச்சயமாக கிடைக்கிறது, உண்மை’ என்று அதிக வாக்கு தேர்ந்தெடுத்ததில், வேதாத்திரிய யோகவழியாகிய, எங்கள் சேவையும் இணைந்திருக்கிறது என்பதில் மகிழ்கிறோம். அத்தகைய அன்பர்களின் சந்தேகங்களை, கேள்விகளை நாங்கள் தீர்க்க உதவியது குறித்தும், அதற்கு வாய்ப்பு அளித்தமைக்கும் இறைநிலைக்கு நன்றியோடு, வணங்கியும் மகிழ்கிறோம். முக்கியமாக, நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும் வணங்கி, நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments