ஒருவருடைய பேச்சிலும், எழுத்திலும் கனிவு முக்கியமா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 300Votes/26Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, ஒருவருடைய பேச்சிலும், எழுத்திலும் கனிவு முக்கியமா?
கனிவு என்பதுதான் மனிதனின் முதிர்ச்சி எனவே முக்கியம் 93% (சரியான / அதிக வாக்கு)
அன்பர்களே, நாம் இந்த உலகில், வாழப் பிறந்திருக்கிறோம். மற்றவர்களோடு கூடி வாழவும், இன்பம் அனுபவிக்கவும், ஒருவருக்கொருவர் அன்பும், கருணையும் கொண்டு தேவைகளை ஏற்கவும், கொடுக்கவும், துன்பங்களை போக்கி கொள்ளவும் வாழவேண்டும் என்பதே நீதி. இதைத்தான் சித்தர்களும், முன்னோர்களும், ஞானிகளும், மகான்களும், வாழ்வியல் தத்துவ மேதைகளும் சொன்னார்கள், வலியுறுத்தி வாழ்ந்தும் காட்டினார்கள்.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
உலகில் நாம் மட்டுமல்ல, நம்மோடு பிறந்தவர்களும், இந்த உலகில் பிறந்துள்ள ஓவ்வொருவருமே அத்தகைய வாழும் தகுதி நிலை பெற்றவர்தான். இந்த புவியில் தோன்றியுள்ள உயிரினங்களில் முழுமையாக இயற்கையை தனக்குள்ளாகவும் அறியக்கூடியவன் மனிதனே. ஆனால் அவனுக்குள் இன்னமும் கருத்தொடராக, சில விலங்கினப் பதிவுகள் தொடர்கின்றன.
தான் மனம் இதனானவன், அதனால்தான் மனிதன் என்று அழைக்கப்படுகிறேன் என்ற உண்மையை உணரமறுக்கிறான். தன்னை உயர்வாகவும், பிறரை தாழ்வாகவும் கருதும் பழக்கம் உடையவனாகிறான். அதை இயல்பு என்றும் சொல்லிக்கொள்கிறான். இந்த தவறான கருத்துக்களின்படியே, தனக்கு கனிவு தேவையில்லை என்ற முடிவுக்கும் வருகிறான். கனிவு மட்டுமல்ல, கற்றோரிடமும், வாழ்ந்து அனுபவம் கண்ட பெரியோரிடம் பணிவும் வேண்டும். ஆனால், பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்ட இவ்வுலகில் ‘கனிவு’ தேவையில்லாததாக மாறிவிட்டது. அழுகிப்போய்விட்டது என்றும் சொல்லலாம். இதனால், அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்...
அப்படியெல்லாம் இருந்தா பிழைக்கமுடியாதுங்க
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னுதான் இருக்கனும்
கனிவா? அதெல்லாம் வேலைக்கு ஆகாதுங்க ஐயா
யாராக இருந்தாலும் கரைக்ட்டா இருந்துக்கனும்
என்ற முடிவுகளில்தான் வாழ்ந்துவருகிறார்கள். பெரியதான விளக்கமின்றி, உங்கள் வீட்டில் உள்ள வாழ்க்கைத்துணை, குழந்தைகள், சகோதர், சகோதரி, பெற்றோர் என்ற அன்பர்களை உதாரணமாக்கிக் கொள்ளுங்கள். இவர்களிடமும் நீங்கள் ‘கனிவு’ இன்றிதான் பேசுவீர்களா? அப்படி பேசினால் என்ன ஆகும்?
இந்தக் கனிவை, அப்படியே எடுத்து, வீட்டை விட்டு வெளியே உள்ள, மற்ற பிற அன்பர்களிடம் பேச்சிலும், எழுத்திலும் காட்டினால் என்ன? ஏன் தயக்கம்?
ஆனாலும், இந்த வாக்கெடுப்பில் ‘கனிவு என்பதுதான் மனிதனின் முதிர்ச்சி எனவே முக்கியம் 93%’ கிடைத்திருப்பது உண்மையிலேயே திருப்தி தருகிறது!
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின், மனவளக்கலையில் பயணிக்கும் நாம், இந்த ‘கனிவான’ நிலையை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டியது அவசியம். அதை முழுமையாக்கிக் கொள்ள, அகத்தாய்வும், தற்சோதனையும் முக்கியம்.
சரி, அப்படி கனிவு காட்டாவிட்டால் என்ன ஆகும்? என்கிறீர்களா? நீங்கள் கொடுக்காத கனிவை, உங்களால் பெற முடியுமா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதுதான் விடை!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments