வேதாத்திரிய யோகம் குறித்து சொன்னாலும், எனக்கு பிடித்ததை மட்டுமே ஏற்பேன் என்ற மனநிலை உங்களுக்கு உண்டா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 252 Votes/20 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, வேதாத்திரிய யோகம் குறித்து சொன்னாலும், எனக்கு பிடித்ததை மட்டுமே ஏற்பேன் என்ற மனநிலை உங்களுக்கு உண்டா?
பொதுவாக வேதாத்திரியத்தில் உண்மைதானே உள்ளது 72% (சரியான / அதிக வாக்கு)
எல்லா பதிவுகளும் படிப்பேன் கேட்பேன், தகுந்ததை ஏற்பேன் 18% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, குருமகான் வேதாத்திரி மகரிஷியின் மூலம், மனவளக்கலையில் அடிப்படை யோக நிலைகள் கற்க 15 நாட்கள் போதுமானது. பெரும்பாலோருக்கு இதுவே போதுமானதுதான்.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
ஆனால், மனவளக்கலையில் முழுமையை பெறுவதற்கும், அதை வாழ்க்கையில் மிகச்சரியாக ஏற்று நம்மை நிலைப்படுத்தி, நான் யார்? என்ற கேள்வியோடு தன்னையறிதல் நோக்கியும், இறையுணர்வு பெறவும், அகத்தாய்வு நிலைகள் கடந்து, பிரம்மஞானம் வரை செல்ல கிட்டதட்ட ஒரு ஆண்டு ஆகிவிடும். அதன்பிறகான ஆசிரியர் பயிற்சி, துணை பேராசிரியர் என்பதெல்லாம் தனி அன்பர்களின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்!
இங்கே, நாம் வேதாத்திரிய யோகவழி பதிவுகளை உதாரணமாக எடுத்துக் கொண்டால், வேதாத்திரிய அன்பர்களின் பொதுவான ஆராய்ச்சிக்கும், அவர்கள் உயர்வுக்கும் போதுமான தன்மைகளை பெற்றுவருகிறது. இதில் நிச்சயமாக எத்தனை ஆசிரியர்கள், துணைபேராசிரியர்கள், பேராசியர்கள் கவனிக்கிறார்கள் என்பதை நாம் அறியோம். என்றாலும்கூட குரு மகான் வேதாத்திரி மகரிஷியின், ‘இறைதத்துவ விளக்கங்களை’ அவர் வழியிலேயே வழங்குவதைத்தான் நாங்கள் நிறைவேற்றுகிறோம். அவரின் வார்த்தைகளைக்கூட அப்படியேதான் எடுத்தாள்கிறோம், எங்களின் புரிதலோடு, உங்களுக்கு இன்னும் தெளிவாக புரிந்து அறிந்து ஏற்றுக்கொள்வதற்காக.
ஆனாலும்...
ஆமாம் எனக்கு தேவையில்லாததை ஒதுக்கிடுவேன் 7%
இப்போதைக்கு எனக்கு இது தேவையில்லை என்பதால் 1%
சும்மா இதையே பார்த்துட்டு படிச்சுட்டு கேட்டுட்டு கஷ்டம்ங்க 3%
என்று சொல்லுவதுதான் வழக்கம். இது தவறு என்று சொல்லமுடியாது. தனக்கு என்ன வேண்டும் என்று முடிவுசெய்துகொள்வது அவரவர் விருப்பமே அன்றி, வலுக்கட்டாயமாக திணிக்கமுடியாது அல்லவா?!
ஆனால் அன்பர்களின் கருத்துத்தேர்வுப்படி, ‘பொதுவாக வேதாத்திரியத்தில் உண்மைதானே உள்ளது' அதனால் ஏற்கலாம். என்றாலும் கூட அது உங்களை வேதாத்திரியத்தில் இருந்து திசை திருப்புகிறதா? என்று ஆராய்வது முக்கியம்!
மேலும், உங்களுக்கு என்ன தேவையோ, அதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் என்பதை இன்னும் உள்அர்த்தமாகச் சொன்னால் ‘உங்கள் கர்மா என்ற வினைப்பதிவு’ எனலாம்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments