Ticker

6/recent/ticker-posts

Best answer for, Why you follow the Yoga?

‘எதற்கைய்யா யோகம் தேவை?’ என கேட்போருக்கு சுருக்கமான பதில்


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 316 votes.

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

அன்பர்களே, ‘எதற்கைய்யா யோகம் தேவை?’ என கேட்போருக்கு சுருக்கமான பதில் என்ன?

நாம் நம்மைப்பற்றி அறிந்து கொள்வதற்காக 53% (சரியான /அதிக வாக்கு)

கொஞ்சம் பின்னோக்கி யோசித்துப்பார்த்தால், நாம் எப்படி இந்த மனவளக்கலை யோகத்திற்கு வந்தோம்? என்பதற்கான விடை எளிமையாக இருக்கலாம். நமக்குள் எழுந்த ஓர் ஆர்வம் என்றால் மிகையில்லை. ஆனாலும் சிறுதயக்கமோ, பயமோ இருந்திருக்கலாம் என்பதே உண்மை. ஆனால் யோகத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்திருக்கும் அல்லவா? அந்த பக்குவம் ஏற்கனவே, நம் மூதாதையர்களின் சிந்தனைகளால் வந்திருக்கலாம். தாய் தந்தையரின் ஊக்கமும், அவர்கள் விருப்பமாகவும் இருந்திருக்கலாம்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! நமக்குள்ளாக, நம்மை யார் என்று அறிந்து கொள்வதுதான் இயல்பான நோக்கமாகும். ஆனாலும் இது பக்திவழியில் ஆழ்ந்து இருப்பவர்களுக்கு தோன்றாது. அவர்களுக்கு யோகம் என்றால் என்ன என்பது ஓரளவு தெரியும் ஆனால் அதில் செல்ல, ஆர்வமோ, விருப்பமோ இல்லை. எனக்கு பக்தி போதும் என்ற அளவில்தான் இருப்பார்கள். அதுதான் எளிமையாகவும் இருக்கிறது. எந்த வகையிலும், உடலை, மனதை கடினப்படுத்தும் வேலையும் இல்லையே. அதனால்தான் மற்றவர்களை பார்க்கும் பொழுது, ‘எதற்கைய்யா யோகம் தேவை?’ என்று கேட்பார்கள். எளிமையான பக்தி போதாதா? என்பது அவர்களின் கருத்து.

இவர்களிடம், 1) இறை என்பது எது என அறிந்து கொள்ளவே 2) இந்த உலகில் ஏன்பிறந்தோம் என்பதை அறிய 3) பிறவிக்கடனை அறிந்து அதை தீர்ப்பதற்காக 4) துன்பம் மிகுந்த வாழ்வில் இன்பமே பெறுவதற்கு, என்றெல்லாம் சொன்னால், சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல், அவர்கள் பக்திவழியிலேயே உறுதியாக நின்றிருப்பார்கள். மேலும் நம்மையே கேள்விகளால் துளைப்பார்கள். இதற்கு எளிமையாக, ‘நாம் நம்மைப்பற்றி அறிந்து கொள்வதற்காக' என்று சொல்லிவிடலாம். இதற்கும் கேள்வி கேட்பார்கள், அதற்கு எளிமையாகவே, யோகம் குறித்து விளக்கி அவர்களை குழப்பாமல், இன்னாருடைய பேரன், மகன் என்றுதான் நமக்கு தெரியும். உண்மையிலேயே ‘நான் யார்?’ என்ற தேடுதல்தான் யோகம் என்று பதில் சொல்லிவிடலாம். முயற்சித்துப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments