Ticker

6/recent/ticker-posts

1st feel about Bio-magnetism gazing practice on Vethathiriyam

ஜீவகாந்த பெருக்கப் பயிற்சியில் ஆரம்ப நிலையில் நீங்கள் உணர்வது என்ன?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 300 votes.

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

அன்பர்களே, ஜீவகாந்த பெருக்கப் பயிற்சியில் ஆரம்ப நிலையில் நீங்கள் உணர்வது என்ன?

உடம்பில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது 63% (அதிக/சரியான வாக்கு)

உண்மையே, இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! வேதாத்திரியம் வழங்கும் ஜீவகாந்த பெருக்கபயிற்சி, முதல் நிலை தீப பயிற்சியிலேயே நாம் கற்று செய்யத் துவங்குகிறோம். திடீரென்று, நமக்குள் ஜீவகாந்த சக்தியில் ஏற்படும் மாற்றம் ஒரு புத்துணர்ச்சியாக தோன்றுகிறது. இது இயல்புதான் எனினும் நீடிப்பதில்லை. காரணம் என்ன?

ஜீவகாந்த சக்தியை நாம் வாழ்நாள் எல்லாம் உபயோகப்படுத்தியும் கூட, அதன் மதிப்பை நாம் அறிந்ததில்லை. வேதாத்திரியத்தில் வந்த பிறகுதான் உண்மை அறிந்தோம் அல்லவா? அதன்படி நாம், அந்த சக்தியை செலவு செய்துதானே பழக்கம்? தனியாக பயிற்சி வழியே பெற்றுக்கொண்டதே இல்லைதானே? அதனால் ஜீவகாந்த பெருக்கப்பயிற்சியில், நமக்குள் ஒரு புதிய சக்தி ஊடுறுவி பாய்வதாக, ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இது நமக்கு ஒரு புதிய அனுபவமே!

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்த இந்த, ஜீவகாந்த பெருக்கப் பயிற்சி, மிகப்பெரும் சிறப்பு, வேறெங்கும் இவ்வளவு மதிப்பாக செய்யப்படுவது இல்லை, சொல்லித்தரப்படுவதும் இல்லை.

சிலருக்கு, இப்பயிற்சி செய்கின்ற சிலர் 1) இதுவரை எனக்கு ஒன்றுமே தோன்றியதில்லை 2) மனம் அமைதியாக நிலையாக தோன்றும் 3) எதையாவது செய்யலாமா என்று பரபரக்கும் 4) நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது, என்பதாகவும் சொல்லுவார்கள். இதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பு நிலையில் வரும் உணர்வுகள். தொடர்ந்த பயிற்சியில்தான் உண்மையான மாற்றத்தை உணர்வார்கள். ஆனாலும் மனதை ஏற்கனவே தவத்தின் வழியாக புரிந்து கொண்டவர்களுக்கு, மனம் அமைதியாக நிலையாக ‘இருப்பதுபோல’தெரியும், ஆனால் இதுவும் நீடிப்பதில்லை.

ஜீவகாந்த பெருக்கப் பயிற்சியை, அதிகாலை நேரத்தில், ஒருமாதம் தொடர்ந்து செய்துபழகிவிட்டால், நமக்குள் ஜீவகாந்த இருப்பு பெருகி இருப்பதை நன்கு உணரலாம். அதை சரியாக, தொடர்ந்து செய்வது என்ற பழக்கத்தை நாம் விட்டுவிடக்கூடாது. மேலும் ஜீவகாந்த பெருக்கப் பயிற்சி குறித்த விபரங்களை எமது, வேதாத்திரிய சானலில் காண்க.

வாழ்க வளமுடன்.

Thanks to: Image source from internet, it will be copyrighted to original owner, here we used for educational purpose only.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments