Ticker

6/recent/ticker-posts

The benefits of the Eye Exercise in Vethathiriya Simplified Exercise

எளியமுறை உடற்பயிற்சியில், கண்பயிற்சியின் சிறப்பு


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 363 votes.

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

அன்பர்களே, எளியமுறை உடற்பயிற்சியில், கண்பயிற்சியின் சிறப்பு என்ன?

கண் தன்மை சீராகும் பார்வை மேம்படும் 66% (அதிக / சரியான வாக்கு)

வேதாத்திரி மகரிஷி வடிவமைத்துத் தந்த, எளியமுறை உடற்பயிற்சியில், நான்காவது பகுதியாக உள்ளதே கண்பயிற்சி. இதை ஏழு நிலைகள் உண்டு. இந்த பயிற்சியின் நமக்கு கிடைக்கும் பலன்களை நாம் அறிவதை விட கண்கள் நன்கு அறியும் என்பது உறுதி. அதை நன்கு புரிந்து கொண்டவர்கள் இப்பயிற்சியை ஒருபோதும் தவறவிடுவதில்லை.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! பெரும்பாலும் வீட்டில், தனியே இதை யாரும் செய்வதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் கருத்து ‘அதான் கண்ணு நல்லாதெரியுதே? அப்புறம் எதுக்கு?’ என்பதுதான். இவர்கள் கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரம் செய்வார்களோ?!

கண்களை நாம் மிகச்சரியாக உயயோகப்படுத்துவதே இல்லை. அதுவும் நாம் கைபேசியில் சிக்கிக்கொண்ட பிறகு இல்லவே இல்லை எனலாம். கண்களில் இருக்கக்கூடிய லென்ஸ் (lens) எப்போதும் நிலையாக இருக்க கூடாது. கண்மணி(pupil) என்பது ஒளியை ஒரே மாதிரியாக பெறக்கூடாது. இந்த இரண்டும் சரிவர நிகழவில்லை என்றால், விழித்திரை பாதிக்கும், அதனால் பார்வைக்கோளாறு நிச்சயம் ஏற்படும். மரபு ரீதியாக இருக்கும் கோளாறுகள் வேறுமாதிரியானவை.

இத்தகைய கோளாறுகள் வருமுன்னே அவற்றை தாங்கி, தானே சரி செய்துகொள்ள, ஊக்கமளிக்க, இந்த கண்பயிற்சி தொடர்ந்து செய்வதன் வழியாக மட்டுமே உதவும். கண்பார்வை குறைபாட்டை சரிசெய்ய கண்ணாடி அணிந்தோர்க்கும் மேம்பாடு கிடைக்கும். ஒருநாள், ஒருவாரம், ஒருமாதம் செய்துவிட்டு, ஒரு மாற்றமும் இல்லையே என புலம்புவதில் பலனில்லை. மாற்றம் வேண்டுமெனில் நாமும் தொடர்ந்து பயிற்சியை செய்தே ஆகவேண்டும். எனவே கண்பயிற்சியால், கண் தன்மை சீராகும் பார்வை மேம்படும் என்பதே சரியானது! சந்தேகம் இருந்தால், பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுக!

வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments