Ticker

6/recent/ticker-posts

Are you interested in meeting me and discussing with me?

'என்னைச் சந்திக்கவும், என்னோடு கலந்து பேசவும் உங்களுக்கு ஆர்வமிருக்கிறதா?’


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை

150 Votes / 11 Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குகள் என்ன? என்பதை காண்க!

 'என்னைச் சந்திக்கவும், என்னோடு கலந்து பேசவும் உங்களுக்கு ஆர்வமிருக்கிறதா?’

நிச்சயமாக ஆம் 88% (அதிக வாக்கு)

நிச்சயமாக இல்லை 3% (சிறப்பு வாக்கு)

நிச்சயமாக இல்லவே இல்லை 2% (சிறப்பு வாக்கு)

ஒரு பிரயோஜனமும் இல்லை 2% (சிறப்பு வாக்கு)

எந்தக்கருத்தும் எனக்கில்லை 5% (சிறப்பு வாக்கு)

-

அன்பர்களே,

வேதாத்திரிய சானல் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளை கடந்து, ஏழாவது ஆண்டில், வேதாத்திரிய அன்பர்களான உங்களோடு நடைபோடுகிறது. இந்நேரத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வாக்குப்பதிவு!

        'என்னைச் சந்திக்கவும், என்னோடு கலந்து பேசவும் உங்களுக்கு ஆர்வமிருக்கிறதா?’ என்று கேட்டு, அதை வாக்குகளிக்க கேட்டிருந்தேன். அந்த முடிவுகள்தான் நீங்கள் இப்பொழுது பார்க்கிறீர்கள்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

கொஞ்சம் சுயபுராணத்தை அனுமதியுங்கள். சில உண்மைகளை சொல்லித்தானே ஆகவேண்டும், அதனால்தான் இந்த சுயபுராணம். கடந்த 2018ம் ஆண்டில் ஒரு ஜூலை மாதத்தில்தான் ‘வேதாத்திரிய சானல்’ ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் எனக்கு இறையுண்மை விளக்கம் கிடைத்தபிறகு என்று சொல்லுவதுதான் முறையானது. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற ‘நிறைபேற்று நிலை’ ஆகும். கிட்டதட்ட 30 ஆண்டுக்கால ‘வேதாத்திரிய பயணத்தின்’ வெற்றிக்கனி என்றும் சொல்லலாம். 2016ம் ஆண்டில் எனக்கு நிகழ்ந்த ஒரு விபத்தும், அதை நினைக்கும்பொழுது எழுந்த மரண பயமும், வலதுகை மூட்டு உடைந்து 48 நாட்கள் வீட்டில் முடங்கியதும், இது வாழ்வதற்கான ஐந்தாவது வாய்ப்பு என்றே கருதி, முழு கவனமாக ‘வேதாத்திரிய தத்துவ ஆராய்ச்சியில்’ இறங்கிக் கொண்ட வெற்றிதான் இது. அதென்ன ஐந்தாவது வாய்ப்பு? ஆம் அத்தனைமுறை தப்பிப் பிழைத்தேன். இதற்குப்பிறகும் 2023ல் ஒரு விபத்து நிகழ்ந்து, அது எனக்கு இறை அனுபவமாக மாறியதும் உண்மை.

இந்த அடிப்படையில், சும்மா நாமும் வேதாத்திரிய புகழ் பாடலாம். காபி பேஸ்ட் போடலாம் என்று நான் ஆரம்பிக்கவில்லை. நான் என் அனுபவத்தைக் கொண்டு, நான் புரிந்து கொண்ட வேதாத்திரியத்தை, என்னுடைய பாணியில் தருவதாகவே ஆரம்பித்தேன். அதுதான் இன்னமும் தொடர்கிறது. மேலும் நான் எந்த ஒரு அமைப்பிலும் இல்லை. அது எனக்கு நிறைவை தரவில்லை என்பதால். நான் தனியாகவே ஒரு சேவை அமைப்பை உருவாகிக் கொண்டேன். அந்த வழியில்தான் ‘வேதாத்திரிய சானல்’ பயணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

28K பகிர்வாளர்களோடு, 1300 காணொளிகளுக்கும் மேலாகவும் அமைந்து ‘வேதாத்திரிய சானல்’ அன்பர்களாகிய உங்களால் நடைபோடுகிறது. உங்களுக்கு நன்றியும், வணக்கமும், வாழ்த்தும் வழங்கி சிறப்பிக்கின்றேன். இந்தநிலையில், புதிய பதிவாக 'அன்பர்களோடு கலந்துரையாடல்’ எனும் தலைப்பில் தர விரும்பினேன். அதுகுறித்த விளக்கம் பெற, இந்த சானலை நிகழ்த்தும் என்னை, அன்பர்களாகிய நீங்கள், எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பியே இந்த வாக்கெடுப்பு வைத்துக்கொண்டேன்.

இனி இந்த வாக்கெடுப்பு முடிவை காண்போம். எப்போதுமே என்னை நான் உயர்த்திபேசுவது இல்லை. அப்படியாக உங்களுக்குத் தோன்றினால் அது என் குறை அல்ல. அதேபோல நான் என்னை எந்த அளவுக்கும் தாழ்த்திக்கொள்ள தயங்கமாட்டேன். அதனால்தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்பதும் உண்மை. எந்தக்கருத்தும் எனக்கில்லை 5% (சிறப்பு வாக்கு) என்று சொன்னவர்களை  எப்போதும் நம்ப முடியாது. இவர்கள் சுலமாக இரட்டை குதிரை சவாரி செய்பவர்கள். இவர்களை விட்டுவிடுவோம். ஒரு பிரயோஜனமும் இல்லை 2% (சிறப்பு வாக்கு) என்று சொன்னவர்கள் ஆபத்தானவர்கள். இவர்களுக்கு முன்பாக தத்துவ விளக்கங்களை சொன்னால், வேதாத்திரி மகரிஷியே கூட தோற்றுவிடுவார். ஒரு பிரயோஜனமும் இல்லை 2% என்று சொல்லுபவர்களால், நமக்குப் பிரயோஜனமும் இல்லை. இவர்கள் நமக்கு தேவையும் இல்லை.  நிச்சயமாக இல்லை 3% (சிறப்பு வாக்கு) / நிச்சயமாக இல்லவே இல்லை 2% (சிறப்பு வாக்கு) என்ற இரண்டு தரப்பினரையும் நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. அவர்கள் வேறு எதோ எதிர்பார்த்து இங்கே வருகிறார்கள். அவர்கள் இன்னும் நீண்ட பயணம் செய்வதற்கு தயாராகவே இருக்கிறார்கள் என்பதால், வேறு யாரேனும் ஒருவரின் துணையை அவர்கள் தேடலாம். ‘வேதாத்திரிய சானல்’ தேவையில்லை.

நிச்சயமாக ஆம் 88% (அதிக வாக்கு) என்று வாக்களித்த அன்பர்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன். உங்கள் வேதாத்திரிய பயணத்தை எளிமையாக்கிட நிச்சயமாக நான் உதவுவேன் என்று உறுதியளிக்கிறேன். என் அனுபவம் உங்களுக்கு துணை நிற்கும். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக, நான் பெரும்பாலான வேதாத்திரிய பதிவுகளை எளிமையாக்கியே தந்து கொண்டிருக்கிறேன். அதற்குச் சான்றாக, என்னுடைய பதிவுகளும், கவிதையும் கருத்துரைகளும், கேள்வி பதில்களும், கட்டுரைகளுமே சாட்சியாக இருக்கிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் எளிமை போதுமானதுதான் என்றாலும், அதை எப்படி புரிந்து கொள்ளலாம் என்றுதான் வழிகாட்டுகிறேனே தவிர, திசை திருப்புவதில்லை.

எனவே 88% அன்பர்களை நான் வாழ்த்தி மகிழ்கிறேன். நாம் சந்திப்போம், கலந்துரையாடுவோம், வேதாத்திரிய தத்துவங்களை புரிந்துகொண்டு, நிலைபேற்று நிலையும், நிறைபேற்று நிலையும் அடைவோம். வாழ்வில் முழுமை அடைவோம். வருக!

வேதாத்திரிய வாக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

Post a Comment

0 Comments