Ticker

6/recent/ticker-posts

When I am in yoga, I will give up drugs.

யோகத்தில் இருக்கும் நான், போதை பொருட்களை...


        வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை

179 votes / 11 Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குகள் என்ன? என்பதை காண்க!

யோகத்தில் இருக்கும் நான், போதை பொருட்களை...

ஒருபோதும் தொட்டதே இல்லை 67% (அதிக வாக்கு)

சிறிதளவு புகைபிடித்தல் மட்டும் 4% (சிறப்பு வாக்கு)

சிறிதளவு குடிப்பழக்கம் மட்டும் 4% (சிறப்பு வாக்கு)

எப்போதாவது நண்பர்களுடன் 6% (சிறப்பு வாக்கு)

விடுபட முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் 19% (சிறப்பு வாக்கு)

-

அன்பர்களே,

இந்த உலகில், நல்ல பழக்கங்களை நாமே தேடிப்போவதற்கு வழி இல்லாமல், கெட்ட பழக்கங்கள் நம்மைத்தேடி தானாகவே வந்தடைந்து நம்மை ஆளுமையும் செய்துவிடுகிறது. அதிலிருந்து மீள்வதே பெரும்பாடாக ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்ல, பல்வேறு வகைகளில் நம் உடல் நலம் மோசமாகி விடுகிறது. வாழ்க்கை நிம்மதி போய்விடுகிறது, வாழ்வின் உயர்வு கெட்டுவிடுகிறது. நம்முடைய உடன்பிறந்தோர், நண்பர்கள், சமூகம் என்ற நிலையிலும் நாம் தடை ஏற்படுத்திக்கொள்கிறோம். யோகத்தில் இருக்கும் நமக்கு போதை, மிகப்பெரும் தடையாகும்.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

ஆம், போதை என்பது, உடலை, மனதை, உயிரை கெடுத்து, யோகத்தின் உண்மையை உணர்வதற்கு வழி இல்லாமல் செய்துவிடும், பிறவியின் நோக்கம் நிறைவேற விடாது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த பழக்கம் வழக்கம் என்பதை மாற்றி, முதலில் வழக்கம், பிறகு அதுவே பழக்கம் என்றுதான் சொல்லுகிறார். தொடர்ந்து ஒன்றை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், பிறகு அதுவே பழக்கமாகி விடுகிறது. பழக்கமாகிவிட்டால் நாம் செய்வதை நாமே உணராமலும் போய்விடுகிறோம்.

ஒரு நாளில், ஒரு முறை மட்டும் என்று தொடங்கிய வழக்கம், பழக்கமாகி, நம்மை அடிமையாகவும் மாற்றிவிட்டதை உணரலாம். போதைப்பொருட்கள் என்றால், எண்ணிலடங்கா வகையில், இந்த உலகில் நிரம்பி இருக்கின்றன. நாம் அந்த ஆராய்ச்சிக்கு செல்லவேண்டாம். இந்த போதைபொருட்களின் அறிமுகம், தானாக யாருக்கும் கிடைப்பதில்லை. ஏற்கனவே அதை அனுபவித்த, ஒரு நண்பரால் உங்களுக்கு அறிமுகமாகும் என்பது உண்மை. அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. அந்த இடத்தில் நாம் விழிப்பாக இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால், அதற்குப்பிறகாவது அதை, தவறு என்று கருதி விட்டொழித்திருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் இதுவரை தொடர்ந்து வந்து விடுகிறார்கள்.

ஒருபோதும் தொட்டதே இல்லை 67% (அதிக வாக்கு) மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை வாழ்த்துகிறோம். சிறிதளவு புகைபிடித்தல் மட்டும் 4% (சிறப்பு வாக்கு) அதனோடு, சிறிதளவு குடிப்பழக்கம் மட்டும் 4% (சிறப்பு வாக்கு) கூடவே, எப்போதாவது நண்பர்களுடன் 6% (சிறப்பு வாக்கு) கிடைத்திருக்கிறது. மிக கவனமாக இருந்து, முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது, இங்கே அவசியமாகிறது. சிறிதளவில்தான், கொஞ்சம்தான், ஒருநாளில்தான், எப்போதாவதுதான் என்று அளவிடுவதே பின்னாளில், பெருமளவில் விரிந்து நம்மை ஆட்கொண்டு அழித்துவிடுகிறது என்பதை அறிக. உடல் நலம் கெட்டு, மன நலம் இழந்து, மனதின் சக்தியும் குன்றி, யோகத்தில் பயணிக்கும் திறனற்று உண்மை அறியமுடியாமல், நம் உயிரும் வற்றிவிட வாய்ப்பாகிவிடும்.

        விடுபட முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் 19% (சிறப்பு வாக்கு) என்பது சிறப்பு. தன்னம்பிக்கையோடு முயன்று, போதை பழக்கத்தை விட்டொழித்தல் மிக நன்று. அப்படியான நண்பர்களை விலக்குதல், சூழலில் இருந்து தள்ளி இருத்தல், வழக்கத்தை மாற்றுதல் என்று கவனமாக இருக்கவேண்டும். கூடுமானவரை தனிமையை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக, பிடித்தமான செயல்களை செய்வதில் நேரத்தை கடத்தவேண்டும். விரக்தி ஏற்படாத நிலையில் மனம் இயல்பாக இருத்தல் அவசியம்.

போதை ‘நான் யார்?’ என்ற உண்மையை கெடுக்கவல்லது. மனதனின் இயல்பை சிதைத்து, தரங்கெடச் செய்வது. வாழ்வின் நோக்கத்தையும், யோக பயணத்தையும் சிதைக்கவல்லது. எனவே கவனமாக இருந்து, வாழ்வில் உயர உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உங்களில் தன்னம்பிக்கையும், உறுதியும் நிறைவதாக. வாழ்க வளமுடன்.

வேதாத்திரிய வாக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

Post a Comment

0 Comments