மௌனம் என்பது குறித்த எனது வார்த்தைகள் என்னவென்றால்...
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை
196 votes / 15 Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குகள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, மௌனம் என்பது குறித்த எனது வார்த்தைகள் என்னவென்றால்...
விளக்கம் சொல்லும் அளவுக்கு அனுபவம் பெற்றேன் 41% (சரியான / அதிக வாக்கு)
அது குறித்த எந்த அனுபவமும் இல்லை 14% (சிறப்பு வாக்கு)
ஏதோ ஒரு நாள் மௌனம் இருந்தேன், அவ்வளவுதான் 11% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, வேதாத்திரிய யோகத்தில் பயணிக்கும் முன்னதாகவே, மௌனம் என்றால் என்ன என்று நமக்கு தெரிந்திருக்கும் என்பது உண்மைதான். சிறுகுழந்தைகளாக நாம் பள்ளிகளில் படிக்கும் பொழுதே ‘பேசாமல் இரு’ என்ற ஆசிரியரின் கட்டளைக்கு நாம் பணிந்திருக்கிறோம். ஆங்கிலத்தில் இதை SILENCE என்று சொல்லுவார்கள். ஒரு மருத்துவமனைக்குச் சென்றால் கூட அங்கே ‘அமைதி காக்கவும்’ என்ற கட்டளை அட்டையை நாம் காணவும் முடியும். மருத்துவமனைகள் இருக்கின்ற சாலைகளில் கூட ‘சைலன்ஸ்’ அடையாளம் வைக்கப்பட்டிருப்பதை காணலாம். எனவே பேசாமல் இருப்பது, அமைதியாக இருப்பது, சப்தமும், இரைச்சலும் ஏற்படுத்தாமல் இருப்பது என்ற வகையில்தான் இந்த ‘மௌனம்’ நமக்கு அறிமுகமாகி இருக்கும் என்பது உண்மை. ஆனால் மௌனம் என்பது யோக சாதனையில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
மௌனம் என்ற வார்த்தை மோனம் என்ற வடமொழியிலிருந்து உருவானதாகும். அமைதி என்பது பின்னாளில் வந்த வார்த்தையாகும். ஆனால் அமைதி என்பது வேறு பொருள் தருவதாகும். எனினும் மௌனம் என்பது வாய் மூடி பேசாமல் இருத்தல் மட்டுமல்ல என்பதை இங்கே தெளிவு செய்துகொள்ள வேண்டும். உள்முகமாக நமக்குள் என்ன நிகழ்கிறது என்று விழிப்பாக இருத்தல் அவசியம். மௌனம் குறித்து நாம் தனிப்பதிவாக காண்போம்,
வேதாத்திரியத்தில் மௌனம் என்பது மிக உயர்ந்த பயிற்சியாகும். பிரம்ம ஞானம் என்ற நிலையில் உயர்ந்தவர்களுக்கு இது நன்கு புரியும். அதை அவர்கள் பயிற்சியாக செய்திடவு முடியும். குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வருடத்திற்கு 30 நாட்கள் மௌனம் கடைபிடிப்பார். அத்தகைய மௌனம் அன்பர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறதா? என்றுதான் இந்த வாக்கு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் ‘விளக்கம் சொல்லும் அளவுக்கு அனுபவம் பெற்றேன்’ என்று 41% அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். மிகவும் பாராட்டக்கூடிய வளர்ச்சி. நிச்சயமாகவே இந்த அன்பர்கள் தங்கள் விளக்கத்தை எமக்கு தெரிவித்தால், அந்த விளக்கத்தை, ஒரு கட்டுரையாகவோ, காணொளியாகவோ தரமுடியும் என்று நம்புகிறேன். விளக்கம் தர விரும்பும் அன்பர்கள், டெலிகிராம் / வாட்சப்வழியாக அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
மேலும், ஏதோ ஒருநாள் இருந்தேன் என்றும் 11% அன்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒருநாள் என்றாலும் நல்லதுதான், அதுவே நல்ல மாற்றத்தை உங்களுக்குள்ளாக தந்து, தகுந்த காலத்தில் இன்னும் சிறப்பாக அனுபவம் பெற துணை நிற்கும் என்பது உறுதி. அது குறித்த எந்த அனுபவமும் இல்லை என்றும் 14% அன்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வருத்தம் தேவையில்லை. மனவளக்கலை மன்றத்தில் ஆசிரியர்களிடம் விளக்கம் பெற்று நீங்கள் மௌனம் இயற்றலாம். நம்முடைய வேதாத்திரிய (யோக) சானல் காணொளி தளத்திலும் விளக்கங்களும், உங்களுக்கான மௌனம் பயிற்சியும் இருக்கிறது. அதன்வழியாக நீங்கள் அதை புரிந்து கொண்டு மௌனம் இயற்றவும் முடியும். இதோ அதற்கான இணைய சுட்டி..
மௌனம் அறிவோம் / Understand the Silence
வேதாத்திரிய வாக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
0 Comments