ஏதேனும் இன்னுமொரு எளிய வழியில் வேதாத்திரியத்தை புரிந்துகொள்ள வழி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சேனலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை
258 Votes/19 Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குகள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, ஏதேனும் இன்னுமொரு எளிய வழியில் வேதாத்திரியத்தை புரிந்துகொள்ள வழி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ஏற்கனவே இருப்பதே எளியவழிதானே?! 65% (சரியான / அதிக வாக்கு)
ஆம் எளியவழி இருந்தால் நல்லதுதான் 14% (சிறப்பு வாக்கு)
அப்படியெல்லாம் ஒன்றும் நினைக்கவில்லை 9% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, ஏதேனும் இன்னுமொரு எளிய வழியில் வேதாத்திரியத்தை புரிந்துகொள்ள வழி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற இந்த வாக்கெடுப்பில், பெரும்பாலோர், 65% அன்பர்கள், ஏற்கனவே இருப்பதே எளியமுறைதானே? என்று முதன்மை வாக்காக தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அது உண்மைதான். எளியமுறை குண்டலினி யோகம் என்பதுதான், வேதாத்திரி மகரிஷி நமக்குத் தந்த கொடை ஆகும். அத்தகைய வேதாத்திரியத்தில்தான் நாம் பயணித்தும் வருகிறோம். சிறப்பாக, அப்படியான மற்றொரு எளியவழியில் தேவை என்று நினைக்கவில்லை என்று 9% அன்பர்கள் வாக்கு தந்திருக்கிறார்கள். இவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
சிறப்பு வாக்காக, ஆம் எளியவழி இருந்தால் நல்லதுதான் 14% என்று வாக்குப்பதிவிட்ட அன்பர்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனென்றால், எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியமே, இவர்களுக்கு விளக்கமாகவில்லை என்பதால், இவர்களின் நிலைக்கு இன்னும் சில எளிமையை தரவேண்டியாக இருக்கிறது எனலாம். நிச்சயமாக, இவர்கள் பக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கலாம். பக்தியும் யோகமும் ஏற்பில்லாத மத்திய தரப்பினராகவும் இருக்கலாம். இப்படியானவர்கள் எந்தபக்கம் போகலாம் என்ற ஒரு குழப்பத்தில்தான் இருப்பார்கள் அல்லவா? கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தால், முற்றிலுமாக விலகிப்போய்விடவும் தயாராக இருப்பார்கள்.
ஏற்கனவே இருப்பதே எளியவழிதானே? என்று கூறும் 65% அன்பர், வேதாத்திரியத்தில் வந்தது எப்படி என்று சிந்தித்தால், அவர்களுக்கு தானாகவே ஒரு உந்துதல் வந்து, வேதாத்திரியத்தில் இணைந்திருப்பார். பெற்றோரோ, உறவினரோ, நண்பரோ, வாழ்க்கத்துணைவரோ சொல்லி, அவரின் வழிகாட்டுதலில், ஏற்கனவே இருக்கின்ற நம்பிக்கையின் வழியிலே தன்னை, வேதாத்தியத்திற்கு நுழைந்திருப்பார் என்பது உறுதி. அதனால்தான், நல்ல புரிதலில், இப்போதே எளிமையாகத்தானே இருக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
அப்படியெல்லாம் ஒன்றும் நினைக்கவில்லை என்ற 9% அன்பர்கள், வேதாத்திரிய பயணத்தில் இருந்துகொண்டு பயணிக்கிறார்கள் என்று அறியவருகிறது. இவர்களுக்கு வேதாத்திரிய கருத்துக்களில் வேறெந்த எண்ணமும் இன்றி கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மை.
இந்த உண்மைகள் வழியாக, ஆம் எளியவழி இருந்தால் நல்லதுதான் 14% என்று தேர்ந்தெடுத்த அன்பர்களுக்கு உதவும் வகையில், குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், ‘திடீரென்று உங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி பயமுறுத்திவிடாதீர்கள். அதையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கின்ற உங்கள் ஆர்வம் சிறப்பு என்றாலும், புதிய ஒரு அன்பருக்கு, புரிந்து கொள்ளுவதில் அது பெரும் சுமையாக மாறிவிடும். அதனால், நேரடியாகவே, நீங்களே சொல்லுவதை விட, எங்கள் தவ மையத்திற்கு, அறிவுத்திருக்கோவிலுக்கு வாருங்கள். அங்கே எங்கள் ஆசிரியர், பேராசியர் விளக்கமளிப்பார், என்று சொல்லிவிடுங்கள்’ என்று வலியுறுத்துகிறார்.
இங்கே, நாம் கவனிக்க வேண்டியது, வேதாத்திரியத்தின் உண்மைகளை, புதிய அன்பருக்கு ஏற்ற விதத்தில், அவருடைய புரிந்துகொள்ளலுக்கு ஏற்றபடியாக, எளிமையாக சொல்லவேண்டியது அவசியமானது என்பது தெரியவருகிறது அல்லவா?!
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, நீங்களும் நீங்கள் அறிந்த வேதாத்திரியத்தை, புதிதாக யார் உங்களிடம், கேள்வியாக சந்தேகத்தோடு கேட்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்றவகையில், எளிமையாக சொல்லுவதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான வேதாத்திரிய சானல் வழங்கும் பதிவுகள், இந்த தன்மையைத்தான் கொண்டிருக்கின்றன என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. கலந்து கொண்ட அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
0 Comments