கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கிறது என்போருக்கும் இடையில் சிக்கி தவிப்பது யார்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை
334 Votes/15 Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குகள் என்ன? என்பதை காண்க!
கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கிறது என்போருக்கும் இடையில் சிக்கி தவிப்பது யார்?
யோகத்தில் தன்னை இணைத்துக்கொள்ளாதவர் 46% (சரியான / அதிக வாக்கு)
எதைசொன்னாலும் நம்புபவர்தான்! 18% (சிறப்பு வாக்கு)
தன்னை குறித்து சிந்திக்காதவர்! 15% (சிறப்பு வாக்கு)
நம்மோடு இருக்கும் சராசரி மக்கள் தான்! 14%
நிச்சயமாக அது, நான் தான்ங்க! 8%
-
அன்பர்களே, இந்த வாக்கெடுப்பில், மிகச்சரியான வாக்குகளை நீங்கள் அளித்திருக்கிறீர்கள், சரியான வாக்காகவும், அதிக வாக்காகவும் அமைந்திருக்கிறது. வாழ்த்துகள். இந்த உலகில், கடவுள் என்ற ஒரு வார்த்தையும், அதற்குறிய அர்த்தமும் எப்போது வந்திருக்கும்? தனக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது. அது வலிமையானது, உண்மையானது, நேர்மையானது. அதை மீறி நாம் எதும் செய்திடவும் முடியாது. அத்தகைய சக்திக்கு, வலிமைக்கு, ஆற்றலுக்கு, செயலாக்கத்திற்கு கடவுள் என்று பெயர் வைத்து அழைக்கலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். சரிதானே?!
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
அப்படி அவர்கள் உருவாக்கிக் கொண்ட கடவுளை, மதித்து, தன்னையும், தன்னைச்சார்ந்த மக்களையும் முறைப்படுத்த, ஒழுங்குசெய்துகொள்ள, இயற்கையை மதித்து நடந்து, போற்றி, பாதுகாக்க ஒரு வழியை உருவாக்கினார்கள். அதை பக்தி எனும் வழிபாடாகவும் கொண்டுவந்தார்கள். அந்த சக்திக்கு, அதற்கு நம்முடைய வணக்கத்தை செலுத்துப் பழகுவதின் மூலம், இனிவரும் சந்ததியினரும் அதை புரிந்துகொண்டு, முரண்படாமல், தன்னிச்சியாக செயல்பட்டு சிக்கி, வாழ்வில் வருந்தவும் மாட்டார்கள். நம்ம பார்த்துக்க்கொண்டு, நாம் செய்யும் தவறுகளை கண்காணித்துக்கொண்டு, விளைவுகளைத் தந்து நம்மை திருத்தவும் ஒரு சக்தி இருக்கிறது என்ற உணர்வில், உண்மையாக, நேர்மையாக வாழ்வார்கள் என்றே கருதினார்கள். அந்த பக்தி என்பதே, உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரிவுகளாக மாறி, பிறகு மதங்களாகவும் மாறிவிட்டது.
இந்த பக்தி வழிபாட்டி என்ன உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்தவர்கள், சித்து என்ற உயிரை அறிந்த சித்தர்கள் ஆனார்கள். யோகத்தை தோற்றுவித்தார்கள், பக்தி என்பதை முறைப்படுத்தி, ஒழுங்கும் செய்தார்கள்.
பின்னாளில் அந்த பக்தி வழிபாட்டில், யார் யாரோ குழப்பம் விளைவித்து, வழிபாடு, பூஜை, வேண்டுதல், திருவிழா, தேரோட்டம் அது, இது என்று இப்போது உள்ள நடைமுறைக்கு வந்து நிற்கிறது. கடவுள் என்ற கடந்து உள்ளே அறிக என்ற வினை, செயல்பாடு மறைந்து போய்விட, மனிதன் எங்கேயோ கடந்து போய் நிற்கிறான், உள்ளே போக முடியாமல். இந்த வழிபாடு மட்டுமே உண்மை என்று பெரும்பாலோரும், பொய் என்று உணர்ந்த வெகு சிலரும், இதைவிட யோகம் தான் முழுமை என்று மிகச்சிலரும் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். உண்மை என்று சொல்லுபவரும், இல்லை என்று சொல்லுபவரும் அவ்வப்பொழுது மோதிக்கொள்கிறார்கள். அந்த மோதலில் பலரும் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த சிக்கிக் கொள்ளும் மனிதர் யார்? என்பதுதான் இங்கே கேள்வி.
உங்கள் வாக்கெடுப்பில் நமக்கு கிடைத்த மிகச்சரியான, அதிகவாக்கு என்பது, யோகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதவர் 46% என்பதுதான், ஆம், யோகத்தில் ஒருவர் தன்னை இணைத்துக்கொண்டால், கடவுள் என்பது குறித்த உண்மை புரிந்துவிடும், தான் யார்? என்ற விளக்கமும் கிடைத்துவிடும். இதுவரை எதை வணங்கினோம், எதை இல்லை என்றோம் என்பதற்கான விடையும் கிடைத்துவிடும். பாமரமக்களின் தத்துவஞானி, குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய, வேதாத்திரியத்தில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறோம். விருப்பம் உள்ள மற்றவர்களும் தானாக வந்து சேரட்டும். கலந்து கொண்ட அனைத்து அன்பர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
0 Comments