வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியத்தில் தெய்வம் என்ற நிலை, எப்படி இருக்கிறது?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 644Votes/45Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியத்தில் தெய்வம் என்ற நிலை...
இருக்கிறது அருவமாக 90% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, உலக ஆன்மீக சரித்திர நிகழ்வில், ஒரு மைல் கல்லாகவும், எல்லோரும் வந்துடைந்து விடுகிற இடமாகவும் முழுமை செய்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான். மனவளக்கலையை உருவாக்கி, வாழ்நாள் முழுவதும் மக்களை உய்விக்கும் சேவையே செய்து தன்னை, வான்காந்தத்தில் நிறைத்துக்கொண்டவர்.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
யோகம் யாரோ ஒருவருக்கு என்று நினைத்திருந்த இந்த உலகத்தில், யார் வேண்டுமானலும் மனவளக்கலை எனும் எளிய யோகசாதனையின் மூலமாக, பிறந்த மனிதன், தான் வாழும் காலத்திலேயே தன் பிறவிக்கடன் தீர்த்து, நான் யார்? என்ற கேள்விக்கான பதிலையும் கண்டு, மெய்ப்பொருள் உண்மை விளக்கமும் உணர்ந்து, தன்னையும் இறையும் அறியலாம் என்று வழிசெய்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி.
தனக்குத்தெரிந்த எல்லா இறை ரகசியங்களையும், மிகத்தெளிவாக, புரிந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறைவு செய்வதையே வாழ்நாள் நோக்கமாக கொண்டு வாழ்ந்தவர். அதுவே அவருக்கு நிறைவையும் தந்தது. ஆன்மீகத்தில் இருக்கும் மக்களுக்கும், யோகத்தில் ஆர்வம் கொண்ட மக்களுக்கும் உறுதுணையாக இருந்து, அவர்களிடம் இருந்த குழப்பங்களை நீக்கியவர். பழமையில் இருக்கிற உண்மைகளை எளிமையாக பிரித்து அறியும் வகையில் நம்மையும் பழக்கபடுத்திவிட்டார் என்றே சொல்லலாம். நம் யோகத்தின் பாதை, காலை காயப்படுத்தும் கற்களும், முட்களும், புதர்களும் இருந்ததை நீக்கி, மிக தெளிவான, அழகான, நிரந்தரமான பாதையும் அமைத்துத் தந்துவிட்டார். அதில் உங்களுக்கு இனியும் சந்தெகம் உண்டா என்ன?
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேதாத்திரியத்தைப் பற்றி இன்னமும் வெளியில் இருக்கும் அன்பர்கள், மாற்றுக்கருத்து கொண்டுள்ளனர். அது அவர்கள் நிலைப்பாடு. வேதாத்திரியத்தை பொறுத்தவரை தெய்வீகம், கடவுள், இறை, மெய்ப்பொருள் என்று அழைக்கப்படும் தெய்வம் என்ற நிலை இருக்கிறது, ஆனால் அருவமாக!
இதுவரை மனம் எடுத்த வடிவமாகவே தெய்வத்தை கண்டும், உணர்ந்தும் வந்த நாம், வேதாத்திரியத்தில் இணைந்த பிறகு அந்த வடிவமற்று, உருவமற்று, அருவமாக உணர்கிறோம். ஆம் ஐம்புலன்களை கடந்த ஓர் உணவால் உண்மை அறிகிறோம். இதுவே வேதாத்திரியத்தின் மெய்விளக்க உண்மையுமாகும்!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
0 Comments