வேதாத்திரிய தத்துவ வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டீர்களா? என்றால் உங்கள் பதில்?!
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 361Votes/22Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, வேதாத்திரிய தத்துவ வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டீர்களா? என்றால் உங்கள் பதில்?!
ஏதோ ஓரளவிற்கு மாறியிருக்கிறேன் 46% (அதிக வாக்கு)
மாறிட முயற்சி செய்துகொண்டே உள்ளேன் 27% (சிறப்பு வாக்கு)
மாறிவிட்டேன் என்று நம்புகிறேன் 17% (சிறப்பு வாக்கு)
-
அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய மனவளக்கலையை நாம் கற்றுவருகிறோம். கற்றவர்கள் அதனோடு பயணிக்கிறோம். கற்றுக்கொண்டதை வாழ்வில் பயன்படுத்தி நாம் உயர்கின்றோம். நாம் வாழ்க்கைத் தரத்தையும், அறிவாட்சித் தரத்தையும் உயர்த்திக் கொள்கிறோம். இந்த இயற்கையோடும், அதன் விதியோடும் மதித்து போற்றி இன்பமே காணும் வாழ்க்கை வாழ ஆயத்தமாகிறோம். அப்படியான உண்மையை அறியவே, வேதாத்திரிய தத்துவ வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டீர்களா? என்ற கேள்விதான் இங்கே எழுந்திருக்கிறது.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
நமது அன்பர்களில் ஒருவரான, குணவசந்தராஜன், இப்படியான பதிலை தருகிறார். ‘வேதாத்ரிய வாழ்க்கை முறை என்று தனியாக இருக்கிறதா இல்லை அன்றாட வாழ்வியலில் சிறு சிறு மாற்றங்களை செய்தாலே பொதும் உடற்பயிற்சி நிறைய பேருக்கு அன்றாட வழக்கமாக உள்ளது அதில் எளிமையாக மாற்றி குருவின் உடற்பயிற்சி செய்தாலே போதும் சிறு சில நிமிடங்கள் ஒதிக்கி காயகல்பம் செய்தாலே போதும் கோவிலுக்கு போகிறோம் அதில் ஒரு பதினைந்து நிமிடங்கள் தவமாக செய்தாலே போதும் இதுதான் வேதாத்ரிய வாழ்கை முறை இதற்காக பெரிதாக மாற்றம் கொண்டுவரத்தேவை இல்லை ஒவ்வொருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்கை முறைதான் வேதாத்ரிய முறை நிறைய பேர் வேதாத்ரியம் என்றாலே சன்யாச வாழ்கை சாமியார் வாழ்கை என்று தவறாக நினைத்திக்கொண்டு தலைதெறிக்க ஓடுகிறார்கள் வாழ்க வளமுடன்.’ இந்த அன்பருக்கு என்னுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
(அன்பர்களே நீங்களும் இதுப்போல விளக்கமான பின்னூட்டம் தந்தால், ஓவ்வொரு பதிவிலும், கட்டுரையிலும் இணைத்துக் கொள்ளலாம்)
குரு மகான் வேதாத்திரி மகரிஷி ‘தேடுவதை விட்டுவிடுங்கள், தேடும் பொருள் அங்கேயே இருப்பதை அறியலாம்’ என்று சொல்லுகிறார். நாம் என்ன தேடுகிறோம்? நிம்மதி வேண்டும், அமைதி வேண்டும், இன்பம் வேண்டும் என்றுதானே? சிலர் பணம் வேண்டும், பொருள் வேண்டும், சுகம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், புகழ் வேண்டும் என்றும் தேடுகிறார்கள். இதுவும் தவறல்ல. ஆனால் இதை தேடினால் கிடைக்காது. நாமே நம்மை உயர்த்தி வரவழைத்துக் கொள்ளவேண்டியதுதான் சரியான வழிமுறை அல்லவா? சரிதானே?!
இந்த வேதாத்திரிய தத்துவ வாழ்க்கை முறை என்பது, நம்மையும், நம் வாழ்வையும் உயர்த்தி, உலகவாழ்வை இன்பமே நிறைந்த அளவோடும் முறையும் அனுபவிக்க வழி செய்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், நாம் எப்போதும் அளவு முறை மீறி சிக்கிக்கொண்டுதானே பழக்கம்? கூடவே, இயற்கை வினை விளைவு நீதி அறியாமல் செயலாற்றி, நமக்கு நாமே குழப்பம் விளைவித்துக் கொள்வதுதானே நம் எண்ணம், சொல், செயல்பாடு? அதோடு கர்மா என்ற வினைப்பதிவின் சுமையை குறைக்காமல், அதை தீர்க்காமல் மேலும் மேலும் இருப்பை கூட்டிக்கொள்வதுதானெ நம் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்கிறோம்? இந்த மூன்றில் இருந்தும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டாமா? அதற்குத்தான் வேதாத்திரியம் உதவுகிறது.
வேதாத்திரி மகரிஷியே சொல்லுவது போல், ‘இதில் நம் சிரமப்பட ஒன்றுமே இல்லை’. வேதாத்திரியத்தின் வழி உண்மையை புரிந்துகொண்டால், வாழும் வாழ்க்கைமுறை எளிதாகும்! வேதாத்திரிய தத்துவ வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டவர்களையும், மாறிக்கொண்டே இருப்பவர்களையும், மாறிட முயற்சி செய்துகொண்டே இருப்போரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
0 Comments