வேதாத்திரிய வாக்குப்பதிவு.
வேதாத்திரிய யோகத்தின் வழியில் செல்வதால் நான்....
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகத்தில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 527Votes/28Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
வேதாத்திரிய யோகத்தின் வழியில் செல்வதால் நான்....
பிறருக்கு துன்பம் தராமல் இருக்க முயற்சிக்கிறேன் 65% (அதிக வாக்கு)
பிறருக்கு எந்த துன்பமும் தருவதில்லை 13% (சிறப்பு வாக்கு)
துன்பம் கொடுத்தாலும் மன்னிப்பு கேட்டுவிடுவேன் 13% (சிறப்பு வாக்கு)
துன்பம் தருவதில்லை ஆனால் திருத்துவேன் 4% (ஏற்பு வாக்கு)
சிலநேரம் பிறருக்கு துன்பம் எழுந்துவிடுகிறது 5% (ஏற்பு வாக்கு)
-
அன்பர்களே, நாம் மனவளக்கலையை நாம் கற்று அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறோம். கற்றுக்கொண்ட பயிற்சிக்கு அழகு, அதன் வழியில் செல்வதுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு வகுத்துத்தந்த பாடமும் அதுதானே?! அதையே இங்கே, அன்பர்களின் அனுபவத்தை அறிய வாக்கெடுப்பாக நிகழ்த்தினோம்.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
இந்த நாள் முதல், எழுதாக வந்த வேதாத்திரிய வாக்குப்பதிவு, முடிவும் விளக்கமும், தீர்வும் இனி வேதாத்திரிய யோகா தளத்தில் காணொளியாக தருகிறோம். அன்பர்களின் ஆதரவுக்கு நன்றி. இதோ இந்த பதிவிலேயே நீங்கள் அறியலாம்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments