Ticker

6/recent/ticker-posts

What will you ask when you meet tha Gnani, Yogi and Mahan?

ஞானிகளை மகான்களை சந்தித்தால் உங்கள் கேள்வி என்னவாக இருக்கும்?



வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 249Votes/38Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, ஞானிகளை மகான்களை சந்தித்தால் உங்கள் கேள்வி என்னவாக இருக்கும்?

எப்போது என் வாழ்க்கையில் சோகங்கள் விலகும்? 65% (அதிக வாக்கு)

எப்போது என் கடன் சுமையிலிருந்து விலகுவேன்? 18% (சிறப்பு வாக்கு)

-

அன்பர்களே, உலகில் வாழும் நமக்கு ஞானிகள், மகான்களின் தரிசனம் பெரும் பேறு எனலாம். ஏனென்றால் அவர்களை நினைக்கும்பொழுதே நம் வாழ்வில் அற்புதம் நிகழும் என்பது உண்மை. சித்தர் பெருமகான் திருமூலர் அவர்களே இதை உறுதிபட கூறியுள்ளார். அத்தகைய ஞானிகளை, மகான்களை நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது அதிலும் சிறப்பானதுதானே?! அந்த நிலையில் நமக்கு எதுவும் பேசத்தோன்றாது என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள்.

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

பகவான் ரமண மகரிஷி அவர்கள் எப்போதும் ஒரு சில வார்த்தைகள்தான் பேசுவார். சில கேள்விகளுக்குக் கூட உடனடியாக பதிலும் சொல்லாமல், அமைதியாகவே இருப்பார் அல்லது நீண்ட நேரம் கழித்து அதற்கு பதிலைக்கூட கேள்வியாகவே கேட்டு நம்மை தெளிவு செய்வார் என்று நாம் அறிந்திருக்கிறோம். சில கேள்விகளை தயார்செய்துவிட்டு போனாலும், அவரை பார்த்தமாத்திரத்தில் எதும் கேள்விகளே கேட்கத்தோன்றாமல், அப்படியே ஆசிவாங்கிவிட்டு திரும்பிவிடுவதும் உண்டு.

வேதாத்திரி மகரிஷியிடம் கேள்வி கேட்க போனவர்கள்கூட ஏதும் கேட்காமல் இருந்தவர்களும் உண்டு, அவர்கள் அனுபங்களையும் நாம் கேட்டிருக்கிறோம். இப்படியான நிலையில், அன்பர்களிடம் ‘ஞானிகளை மகான்களை சந்தித்தால் உங்கள் கேள்வி என்னவாக இருக்கும்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கான பதில் சில, வாழ்க்கை பிரச்சனைகள் சார்ந்து இருந்தாலும், பெரும்பாலான அன்பர்கள், அதை தவிர்த்து, உண்மை விளக்கம் குறித்தே கேட்க விரும்புகிறார்கள் என்பது விடையாக கிடைத்திருக்கிறது. இதோ அதை நாமும் அறிந்துகொள்ளலாமே!

இதில் இல்லாத வகையில், வேறே ஏதேனும் உங்கள் கேள்வி இருக்குமானால், இங்கே பதியலாமே!? என்று கேட்டிருந்தோம் அதில் அன்பர்களின் பதில் இங்கே...

1) என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுகொண்டு எனக்கு முக்திக்கு வழிகாட்டுங்கள் என்று கேட்பேன்

2) நான் இப்படியே சௌக்கியமா இருக்கணும் கடைசி வரைக்கும். வாழ்கவளமுடன்

3) பிறவாமை யாரூக்கு கிடைக்கும் என்று கேட்பேன்????

4) I will ask nothing but blessings

5 ) நான் சரியானவனா தவறானவனா அல்லது போகும் பாதை எப்படி இருக்கிறது?

6) அருள் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்

7) மகான் அவருடைய ஆசிர்வாதம் பெற்றால் போதும் மகிழ்ச்சி 8) என்றும் மக்கள் நிறைமனதோடு வாழ வழி கேட்பேன்

9) மகான்கள் ஞானிகள் photos பாத்தாலே நிறைய டைம்ஸ் கேட்டது  ❤எப்படி பா ❤  உங்களால மட்டும்🙏

10) அருளாசி வழங்க வேண்டுவேன். வாழ்க வளமுடன்!!!

11) Avargalai parthale pothum ellam sariyagividum innum avargalidam aasi vangi kondal poorva jenma palan kidaithu vidum...🙏🙏🙏

12) இறைநிலை உணர்வேன்

13) குரு எப்போது முக்தி கிடைக்கும்?

14) அருள் வழங்க கேட்பேன்

15) Naan prabanjathodu inaithu seyalpafa arul puriya ketpen  nandri prabanjam 

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments