மக்கள் நடைபயிற்சி செய்வது இப்பொழுது பெருகிவிட்டது, காதை அடைத்துக்கொண்டு, காதில் இசை கேட்டுக்கொண்டே நடைபயிற்சி சரியானதுதானா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 226Votes/12Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, மக்கள் நடைபயிற்சி செய்வது இப்பொழுது பெருகிவிட்டது, காதை அடைத்துக்கொண்டு, காதில் இசை கேட்டுக்கொண்டே நடைபயிற்சி சரியானதுதானா?
அதுனால என்னங்க? இன்னும் நடக்க ஆர்வம் தானே உண்டாகும்?! 11%
கூடவர ஆட்கள் கூட பேசிட்டே நடக்குறது பதிலா இது நல்லது! 12%
சரிதான், அதிகமான சப்தம் வைத்து கேட்பதுதான் கெடுதல் 39%
இப்படி போனால்தான் வேறெதும் பிரச்சனை வராதுங்க! 5%
சரிதான் சோர்வு ஏற்படாமல் நீண்ட நேரம் நடக்கலாமே?! 33%
அன்பர்களே, இந்த வாக்குப்பதிவில் எல்லாமே தவறான வாய்ப்புகள் தான் தரப்பட்டன. அதாவது அன்பர்களின் புரிந்துகொள்ளுதலில் எப்படி இருக்கிறார்கள் என்ற பரிசோதனைக்காக இப்படி தந்தோம். ஆனாலும் ஐந்து அன்பர்கள், இதில் தரப்பட்ட வாய்ப்பு எல்லாமே தவறு என்று சொல்லி விட்டனர். அவர்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
வாக்குப்பதிவில் கலந்துகொண்ட 226 அன்பர்களில் ஐந்து கழித்தால், 221 அன்பர்கள் உண்மையை அறியாமல் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதை எத்தனை அன்பர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதும் நாம் அறியாதது. எனினும் இந்த வாக்கெடுப்பின் வழியாக விளக்கம் காண்போம்.
நமது உடல், இந்த இயற்கையின் அதிசயம் என்பதில் எதேனும் ஐயம் உண்டோ? எத்தனையோ பரிணாமத்தின் வழியாக முழுமை பெற்றது அல்லவா? அதனால்தான் மனிதனுக்குப் பிறகு வேறெந்த உயிரின பரிணாமமும் எழவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். மேலும் ஆறாம் அறிவினில் முழுமை பெற்றதும் நாம் தானே?! அத்தகைய அற்புதமான வடிவமைப்பை நாம் எந்த அளவிற்கு மதித்து நடக்கிறோம் என்பதை நாம் மட்டுமே அறிவோம். ஒவ்வொருவரும் தனித்தனியாக என்பது கூட உண்மையே!
ஆனால் உடலுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் மட்டும் பதறுகிறோம். எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறோம். எவ்வளவு செலவானாலும் போதும், பழைய நிலைமைக்கு உடல் திரும்புவிட வேண்டும் என்று மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் சரண் அடைகிறோம் அல்லவா?
காதுகள் மிக நுண்ணிய ஒலி உணர் புலன் கருவி ஆகும். அதுமட்டுமல்ல, அது உடலை சம நிலைக்கு வைக்கவும் உதவுகிறது. உடலின் வெப்பம், காற்று, அழுத்தம் ஆகியவறையும் கூட சம நிலைபடுத்துகிறது. காதுகளை அடைத்துவைப்பதால், இது எல்லாமே பாதிப்படைகிறது. ஒலியை மிக அருகில், நீண்ட நேரம் ஒரே நிலையில் கேட்பதால், செவி ஒலி உணர்வுகள் மட்டுப்படுகிறது. அது இரைச்சலையும், காதுகேளாமையையும் ஊக்குவிக்கிறது. முக்கியமாக உங்கள் கவனத்தை சிதறடிக்கிறது, மனதையும் பாதிக்கிறது.
ஏங்க? உலகமே அப்படித்தான் போய்கிட்டு இருக்கு, நீங்க வேறே?! என்கிறீர்களா? நல்லது, நீங்கள் தொடராலாம், உங்கள் உடல், உங்கள் காது, உங்கள் headset, உங்கள் நடைப்பயணம்...
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments