தசைநார் மூச்சுப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் உதவும் என்பது ஏன்?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 226Votes/19Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, தசைநார் மூச்சுப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் உதவும் என்பது ஏன்?
மூளை இயக்கம், ஞாபகத்திறன் அதிகமாகிறது 80% (அதிக வாக்கு)
-
அன்பர்களே, கற்றல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்குமே உண்டு. மனிதர்களுக்கு ஒருஅளவில், கற்கும்பொழுதே முன்னெச்சரிக்கையாக கவனமாக இருத்தலும் அதன் பயனை மட்டும் பெறும் விளக்கமான அறிவு உண்டு. மேலும் தானாகவே கற்கும் நிலையும் உண்டுதானே!
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
குழந்தைகள் தான் வளரும் காலத்தில், அவர்களின் தேவைகளை கொடுத்து, கவனமாக பாத்துகாத்து வளர்க்க வேண்டியது அவசியம். 10 மாத வளர்ச்சிக்குப்பிறகு, தானாகவே செயல்பட அக்குழந்தைகள் ஆர்வம் கொள்ளும். பிறர் செய்வதை நன்கு கவனித்து, அதுபோலவே செய்யவும் ஆரம்பிக்கும். சொல்லிக்கொடுத்தாலும் செய்யும். இதனால் அங்கே கற்கும் அறிவு எப்போதுமே தயாராக உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். மூன்று வயதிற்குப் பிறகு நமக்கே சிலவற்றை கற்றுத்தரக்கூட அவர்கள் தயாராகி விடுவார்கள் அல்லவா?
குழந்தைகள் வளர்ந்து வரும் வீட்டிலேயே சில அடிப்படை கல்வியை கற்றுக்கொள்வார்கள். பள்ளி சென்று இன்னும் கூடுதலாக பாடம், உலகம், அனுபவம், நண்பர்கள், ஆசிரியர்கள், பிறர் என்று அவர்கள் கற்கும் வட்டம் பெரிதாகிவிடும். ஆனாலும் சிலர் சோம்பலாகவும், கற்றலில் ஆர்வமின்றியும், சொல்லிக் கொடுத்தாலும் மறந்துவிடுவார்கள். பிற விளையாட்டு போன்ற விசயங்களில் இருக்கும் ஆர்வம் கல்வியில் இருக்காது. இதற்கு காரணம் உண்டு. இவர்களை தனிச்சிறப்பு குழந்தைகள் என்றுகூட அழைப்பார்கள். இவர்களுக்கு உடலில், ரத்தத்தில், மூளையில், மனதில் சில பிரச்சனைகள் உண்டு. அவை சில ஆய்வுகளுக்கும் சிக்காதவை.
இப்படியானவர்களுக்கு, தகுந்த வயதில், 10 வயது முதலே கூட, எளியமுறை உடற்பயிற்சியை கற்றுத்தரலாம். குறிப்பாக அதில் இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தசைநார் மூச்சுப்பயிற்சி மிகவும் உதவும். கிடைக்கும் பலன் மூளை இயக்கம், ஞாபகத்திறன் அதிகமாகிறது, அதன் வழியாக பாடங்களை எளிதில் புரிந்துக் கொள்ளும் தன்மை வரும், கற்றுக்கொள்வதில் ஆர்வமும் புத்துணர்வும் கிடைக்கும், சொல்லுவதை சுலபமாக கிரகித்துக் கொள்வார்கள், மனப்பாடம் செய்யும் தன்மை அதிகமாகிறது எனலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், உடலை வருத்தாத வகையில்தான் இந்த பயிற்சிகளை வடிவமைத்திருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும். எனவே இவற்றை செய்து பழக 10 வயது என்பது சரியானதே!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments