Ticker

6/recent/ticker-posts

How to accept the effect on your daily life activities?

உங்களுக்கு ஏற்படும் நிகழ்வு, பிரச்சனைகளை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று சொல்லுவீர்களா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 226Votes/12Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, உங்களுக்கு ஏற்படும் நிகழ்வு, பிரச்சனைகளை எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று சொல்லுவீர்களா?

என் கர்மா அதான் இப்படி அனுபவிக்கிறேன் வேற வழி? 84% (அதிக வாக்கு)

-

அன்பர்களே, கர்மா என்ற வினைப்பதிவு குறித்து 84% ஏற்றுக்கொள்ளும் தன்மை வந்திருப்பது உண்மையில் நல்ல புரிதலை காட்டுகிறது. என்றாலும்கூட அதில் ஒரு புலம்பல் இருப்பதை காணலாம். வேற வழி? என்ற இந்த புலம்பல் ஏன் வருகிறது?!

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

கர்மா என்ற வினைப்பதிவு என்பதை இன்னமும் சரியாக தெளிவாக ஏற்றுக்கொள்ள தயார் நிலைக்கு மனம் உயரவில்லை, அதோடு நான் எதுவுமே தவறாக செய்யவில்லையே என்ற நிலையிலும் செயல்படுகின்றனர், தனக்கு சாதகமான நல்லது நிகழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்ற இரு காரணங்களை சொல்லலாம்!

முதலில், கர்மா குறித்த தவறான தகவல்களை, முரண்பாடான கருத்துக்களை விட்டு விலகுங்கள். அதுதான் உங்களை உண்மையான கர்மாவுக்கான புரிதலுக்கு துணை செய்யும். வேதாந்தத்தின் வழியாக கர்மா தீர்த்தல், இப்பிறவியில் தீர்க்க முடியாது, இன்னும் பல பிறவிகள் வேண்டும், அதனால் இப்பிறவியில் அப்படி, இப்படி நடந்து கொள், இறை பக்தியோடு வாழ்க என்று சொல்லும். ஆனால் யோகத்தில், கர்மாவை நாம் தீர்க்க முடியும், இந்த பிறவியை அதற்காக பயன்படுத்த முடியும். வாழும் காலத்திற்குள் தீர்த்து, அறவாழ்வில் இன்பம் துய்க்கவும் முடியும் என்பதே உண்மை.

மிக எளிதாக விளக்கத்தை கவனியுங்கள், இயற்கையின் விதி விளைவு நீதிக்கு அப்பாற்பட்டு ஒரு செயலை செய்யும் பொழுது அதுவே கர்மா என்ற வினைபதிவாக நமக்கு பதிவாகிறது. அந்த பதிவை அறத்தால் சரி செய்து தீர்க்க வேண்டும். இதை புரிந்துகொண்டால் போதுமானது. இந்த இயற்கை வினை விளைவு நீதியை புரிந்து கொள்ளாமல்தான், எல்லாம் என் தலையெழுத்து அதான் இப்படி நடக்குது, இன்னைக்கு என்மேல் இறைக்கு கருணையில்லை, விதி விதிச்ச வழி அப்படித்தான் அனுபவிப்போம், நாம ஒன்னு நெனச்சா அதுவா ஒன்னு நடக்குது ச்சே! என்று நாம் புலம்புகிறோம். 

மனித வாழ்வில் இரண்டு செயல்பாடுகள் இருப்பதாக, முன்னோர்கள் சொல்லுகிறார்கள். அறவழி மற்றும் பாவவழி. இதில் அறத்தை தேர்ந்தெடுத்து அறவாழ்வில் பயணித்து, நம் எண்ணம், சொல், செயல் இவற்றில் கவனமாக, விழிப்புணர்வாக, தனக்கும், பிறருக்கும் மன உடல் பாதிப்பில்லா விளைவை நோக்கி வாழ்ந்தால், இருக்கிற கர்மாவும் தீரும், இனி புதிதாக எதும் எழாதவண்ணமும் இருக்கும் என்பதே உண்மை. இது குறித்தான விளக்கங்கள், உங்கள் புரிதலுக்கு வேண்டுமெனில், கேள்விகள் கேளுங்கள். பதில் தர காத்திருக்கிறோம்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments