Ticker

    Loading......

The truth about the food habit on Veg and Non-Veg!

சைவ உணவு, அசைவ உணவு எடுத்துக்கொள்வதில் உங்கள் நிலைபாடு என்ன?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 403Votes/28Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, சைவ உணவு, அசைவ உணவு எடுத்துக்கொள்வதில் உங்கள் நிலைபாடு என்ன?

எனக்கு சைவ உணவு மட்டுமே போதுமானது 56% (அதிக வாக்கு)

சைவம்தான், ஆனால் எப்போதாவது அசைவும் உண்டு 26% (சிறப்பு வாக்கு)

எனக்கு இரண்டுமே சம அளவில் விருப்பம் உண்டு 14% (சிறப்பு வாக்கு)

-

அன்பர்களே, உணவு குறித்த வாக்குபதிவுக்கு, ரொம்பவும் ஆர்வமாக கலந்து கொண்டிருக்கிறீர்கள். மனித வாழ்வின் உணவு பழக்கம் குறித்து ஆராய்ந்தால், கற்கால மனிதர்களின் வாழ்க்கையில், மிருகங்களைப் போலவே, பிற உயிர்களை கொன்று, அவைகளின் உடலையே உணவாக்கிக் கொள்வதுதான் இருந்தது. நெருப்பு என்ற ஒன்றை கண்டுகொண்ட பிறகுதான், அதையும் சூடாக்கி உண்ணவும் அதில் பல மசாலாக்களை சேர்த்து ருசிகூட்டவும் கற்றுக்கொண்டான். ஆனாலும்,

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!

இயற்கையை உணர்ந்து, தன் பிறப்பின் சிந்தனை உயர்ந்து, ஆறாம் நிலை அறிவாக தன்னை அறிந்து, தெய்வீகத்தையும் உணர்ந்த நம், தமிழக சித்தர்கள், பாரத மகான்கள், அசைவம் என்று உணவை பிரித்து, மனம் இதனான மனிதனுக்கு சைவ உணவு வகைகளே சிறப்பு என்பதை கண்டு கொண்டார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூட, இந்த பூமிக்கு மறுபக்கம், மேற்கு உலக நாடுகளில் விவசாயம் இல்லாத நிலையில், அதற்கான பருவ கால மாறுபாடு காரணமாகவும், அதற்கான கல்வியறிவு இல்லாததாலும், அசைவ உணவே பிரதானமாக இருந்தது.

நம் நாட்டில் குலதெய்வ வழிபாடு என்ற வகையில், உயிர்பலி என்ற சடங்கின் வழியாக, ஆண்டுக்கு ஒரு முறை என்றுதான் வழக்கத்தில் இருந்து வந்தது. பிற்காலத்தில், மாதம் ஒருநாள், வாரம் ஒருநாள் என்றாகி, இன்றோ தினமும் என்பதாக மாறிவிட்டது. மேலும் உலகமே, விவசாயத்தில் உயர்ந்திருந்தாலும் கூட, பல்கிப் பெருகும் உயிரினங்களை கட்டுப்படுத்துவதாக எண்ணி, அசைவ உணவும் மிகுந்துவிட்டது. சிலர் உணவுக்காகவே வளர்க்கவும் செய்கிறார்கள்.

இவ்வளவு விளக்கம் எதற்கைய்யா? அசைவம் சாப்பிடலாமா? கூடாதா? அதைசொல்லுங்க முதலில், என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உடலுக்குத் தேவையான சத்துக்களை தரவும், எற்கனவே இருக்கிற சத்துக்களை கூட்டவும், உடல் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டம் தரவும் அசைவ உணவில் ஏதுமில்லை. ஆனால் உங்களுக்கு அதிகமான ருசி தூண்டலையும், அதிக ஆற்றலுக்கு தேவையான கொழுப்பு, புரதம் சக்தியை கொடுப்பதில் ஐயமில்லை. ருசி தூண்டல் உடலை, உடல் வெப்பத்தை சிதறடிக்கிறது. அசைவம் உண்டால், நல்ல உடல் உழைப்பு தந்தால்தான், அதீத கொழுப்பு ஆகியன செலவாகும், செரிமானமும் நன்கு நிகழும்.

அசைவம் தவறுதான் அதை விலக்கிடுக என்று சொல்லலாமே தவிர, அதை உடனடியாக ஒதுக்கிவிட முடியாதுதான். ஆனால், அசைவத்தால் கிடைப்பதை விட, அதிக நன்மைகள் சைவ உணவில்தான் கிடைக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அசைவத்தை விட்டு விலகிவிடுங்கள். உங்களை, உங்கள் உடலை, உடல் உறுப்புக்களை இயற்கையோடு இணைந்திட வழி செய்திடுங்கள், சைவ உணவின் வழியாக!

ஒரு அசைவ உணவில் நீங்கள் கை வைக்கும் பொழுது, அங்கே உங்கள் தட்டில் / இலையில் இருக்கும் உணவு,

1) ஒரு உயிர் பலி / கொலை செய்யப்பட்டது

2) அந்த உயிரின் வாழும் சுந்ததிரம் பறிக்கப்பட்டது

3) அந்த உயிரின் உடலையே உணவாகவும் உட்கொள்ளுகிறீர்கள்

என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.  காய்கறி, பழங்களில் இது நிகழாதா? என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. சந்தேகமெனில் கேள்வி கேளுங்கள்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments