நீங்கள் மற்றவர்களால் பயன்படுத்தப்படுவதாக உணர்ந்திருக்கிறீர்களா?
வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 229Votes/20Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!
அன்பர்களே, துரியாதீத தவம் செய்ய நன்கு துரியதவம் பழகவேண்டும் என்பது உண்மையா?
ஒருவரை ஒருவர் சார்ந்துதானே வாழவேண்டி உள்ளது?! 77% (அதிக வாக்கு)
எப்போதாவதுதான், நானும் அவர்களை பயன்படுத்துவேன் 3% (சிறப்பு வாக்கு)
அன்பர்களே, இந்த உலகம், பொருள்முதல்வாத உலகம் என்ற நிலைக்கு மாறி நீண்டகாலம் ஆகிவிட்டது. எனவே ஒவ்வொருவரும் ஒருவரை சார்ந்துதான், வாழ வேண்டியது உள்ளது.
இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாமே!
பொதுவாகவே ஒரு தனிமனிதராக, தனக்கு தேவையான எல்லாவற்றையும் உருவாக்க முடியாது, பயன்படுத்தவும் முடியாது. அதனால் தனக்கு தேவையானதை பிறரிடமிருந்து பெறவும், தன்னிடமிருப்பதை பிறருக்கு பகிரவும் வேண்டியுள்ளது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லும் பொழுது, ஒரு மனிதரின் தனி அறிவு, இவ்வுலக மக்கள் எல்லோருக்குமே பயன்படும் தன்மை படைத்தது என்று சொல்லுகிறார். அந்தவழியேதான், நாம் பெற்றிருக்கிற பொருட்கள் எல்லாமே, யாரோ ஒருவர் தயாரித்து அளித்ததுதானே?!
ஒரு நிறுவனம் தயாரித்தது என்றாலும் கூட, அங்கே ஒரு தனிமனிதர் தானே வேலையாளாகவும் இருக்கிறார்?! அதை நாம், நம் உழைப்பால் பெற்ற பணம் மூலமாக பெறுகிறோம். அந்த பணம் அவருக்கு கூலியாகவும் போய்ச்சேருகிறது. இப்படியாகவே உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கிறோம் என்பதே உண்மை.
ஆனால், உங்களை ஒருவர் பயன்படுத்துவதை அனுமதிக்கலாமா? அல்லது நீங்கள் யாரையேனும் பயன்படுத்திக் கொள்ளலாமா? என்றால் கூடாது. அது இயற்கைக்கு முரணான செயலாக அமைந்துவிடும். ஒருவேளையாக பயன்படுத்திக்கொண்டால், இருவருக்கும் அதனால் பலன் கிடைக்கிறது என்ற நிலையில் அங்கே முரண் ஏற்படுவதில்லை. எனவே அதில் கவனம் கொள்க. ஒருவரை ஒருவர் ஏமாற்றும் விதமாக, உங்கள் உழைப்பை, அறிவை பயன்படுத்துகிறார் என்றால் நீங்கள் கவனமாக இருங்கள். அதை அனுமதிக்காதீர்கள். அதுபோலவே நீங்களும் அவரை ஏமாற்றி பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இயற்கை நீதி வலுவானது. நீதி தவறாதது என்பதை நினைவில் கொள்க.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments