Ticker

6/recent/ticker-posts

Do you think we keep on looking for a happy life?

இன்பமான வாழ்க்கையை நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?


வணக்கம் அன்பர்களே, நம் வேதாத்திரிய யோகவழியில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா?! அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம், இதில் கலந்துகொண்டோர் / வாக்கு மொத்த எண்ணிக்கை Voters383/20Likes (இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)


நிகழ்வில் கிடைத்த சரியான, அதிக, சிறப்பு வாக்குக்கள் என்ன? என்பதை காண்க!

அன்பர்களே, இன்பமான வாழ்க்கையை நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?

இல்லைங்க, வாழ்வதே இன்பம்தானே?! கஷ்டமெல்லாம் சகஜம் 62% (அதிக / சரியான வாக்கு)

மனசுலதான் இருக்கு சொல்றாங்க ஆனாலும் இல்லையே! 6% (சிறப்பு வாக்கு)


அன்பர்களே, இந்த உலகில் பிறந்த நாம், இன்பமாக வாழ நினைப்பது இயல்பானதுதான். அதில் எந்த தவறும் சொல்லிவிட முடியாது. இயற்கையில் இன்பமே நிறைந்திருப்பதையும் அறியலாம். ஏதேனும் சில காலங்களில், இயற்கை சீற்றம் கொண்டு துன்பம் விளைப்பதும் அது மக்கள் வாழும் இடங்களில் நிகழ்வதும் துயரமானதுதான், ஆனால் அத்தகைய இயற்கைக்கு முன் நாம் எதுவும் செய்வதற்கில்லை. மேலும் சொல்லப்போனால், அந்த இயற்கைக்கு மதிப்பளித்து, நாம் எந்த வகையிலும் கெடுக்காமல், கெடுதல் செய்யாமல் இருந்தால் போதுமானது அல்லவா?

இதை நாம் இன்னும் விளக்கமாக பார்க்கலாம்!

இன்பமாக வாழவேண்டும் தன் பிள்ளை என்றுதான், நம் பெற்றோரும் நம்மை வளர்த்தெடுத்து இருக்கிறார்கள். நம்முடைய குழந்தைப்பருவத்தை கொஞ்சம் நினைவுகூர்க. எவ்வளவு இன்பமாக வாழ்ந்தோம் என்பது நினைவில் வருகிறதே? அத்தகைய இன்பம் இப்பொழுதும் தொடர்கிறதா? யாரேனும் ஒரு சிலருக்கு அப்படி மாறாதிருக்கலாம். ஆனால் பெரும்பாலோர் தொலைத்துவிட்டனர் அல்லது எங்கே என்று தேடிக்கொண்டே இருக்கின்றனர். உண்மைதானே?

ஆனால், இங்கே வாழும் மனிதர்கள் ‘இல்லைங்க, வாழ்வதே இன்பம்தானே?! கஷ்டமெல்லாம் சகஜம்’ என்ற பக்குவத்திற்கு வந்துவிட்டனர். உண்மையிலேயே, கஷ்டம் என்பது சகஜம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உங்களை நீங்களே அதற்கு பழக்கப்படுத்திக்கொண்டு விட்டீர்கள். வாழ்வது இன்பம்தான். மேலும் எப்போதும் இன்பமாக வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் அர்த்தமும் ஆகும். ஆனால் இங்கே துன்பமும் கஷ்டமும் எங்கே வருகிறது என்றால், நம் தவறுகளால்தான் வருகிறது அல்லது நிகழ்கிறது.

மனசுலதான் இருக்கு சொல்றாங்க ஆனாலும் இல்லையே! என்றும் சொல்லுகிறார்கள். அவர்கள் இன்னமும் உண்மையை அறியவில்லை, அதை நோக்கி நகரவும் இல்லை. ஆம், நாம் வாழும் வாழ்க்கையில் இன்பம் என்பது மனதில்தான் இருக்கிறது. அதை நாம் அறிந்தாலும், அலட்சியம் செய்து வாழ்க்கையை வாழ நினைக்கிறோம். குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிக சுருக்கமாக விளக்குகிறார். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, மனதிற்கோ, உடலுக்கோ தீங்கு செய்தால், அது துன்பம். உதவி செய்தால் அது இன்பம். இதை நாம் கடைபிடித்தால், இன்பத்தை தேடவேண்டிய தேவை உண்டாகுமா?

வாழ்க வளமுடன்.


Post a Comment

0 Comments