வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 271Votes/18Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, உங்கள் வாழ்க்கை மற்றும் பிரச்சனை என்றால் இதில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
பிரச்சனை இல்லாத வாழ்க்கைதான் 20% (சரியான வாக்கு)
வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது 60% (அதிக வாக்கு)
ஒன்றுமே சொல்லுவதற்கில்லைங்க 10% (பொதுவான வாக்கு)
-
அன்பர்களே, நமக்கு வாழ்வில் கிடைக்கின்ற, அடிக்கடி கிடைக்கின்ற அறிவுரை என்ன தெரியுமா? ‘வாழ்க்கைன்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும், அப்படியே கடந்து போய்டனும் ஆமா’ என்பதுதான். இதையே நாம் நம்பிக்கொண்டு, இருக்கும் பிரச்சனைக்கு மேல், நாமும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு துன்பப்படுகிறோம்.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குழந்தையாக இருக்கும் நிலையில் பிரச்சனை இருந்ததா? இதற்கான பதில் இல்லை என்றுதான் சொல்லுவோம். நாம் நம் அறிவால், நமக்கு நன்மை தீமை அனுபவிக்கும் பொழுது ‘பிரச்சனை’ என்று சொல்லிவிடுகிறோம். இயற்கையாக, நாம் பிறக்கும் பொழுது இருந்தே பிரச்சனை என்பது இல்லைதான். நம் மனமும் உடலும் ஏற்றுக்கொள்ள முடியாதது பெரும்பாலும் நமக்கு பிரச்சனையாகிறது எனலாம்.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, மனிதத்தவறுகள் தான் பிரச்சனைக்கு காரணம் என்பார். இயற்கையில் எழும் பிரச்சனை இயல்பானது. அதை நாம் ஏற்று தகுந்த மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனாலும் அது இயற்கையை மீறாத தன்மையோடு இருக்கவேண்டும். நம்முடைய பிரச்சனைகள் என்ன? ஏன்? எதனால்? எப்படி சரி செய்துவிட முடியும்? என்று தினந்தோறும், அகத்தாய்வு செய்துவந்தால், பெரும்பாலான பிரச்சனைகளை தீர்த்துவிட முடியும். சிலவற்றை அப்படியே தூக்கி, தள்ளிவைத்தும் விடலாம். பெரும் சுமை அகற்றிவிடலாம். ஆனால் நமக்கு பிரச்சனைகளை சுமந்தே பழக்கமாகிவிட்டது. அதனோடு வாழ்வதும் பழக்கமாகிவிட்டது அல்லவா?
பிரச்சனைகளுக்கு உதவி வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் பிரச்சனையின் மூலகாரணம் யார்? நாம் தானே? நம்மை சரி செய்து கொண்டால் கொஞ்சமாவது வழி கிடைத்துவிடும் தானே? இன்றே அகத்தாய்வு பயிற்சியை தொடங்கி, பிரச்சனைகளை தீர்க்க முடிவு செய்யுங்கள்.
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments