வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 311 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
எளிய முறை உடற்பயிற்சியில் உங்கள் பயிற்சி நேரத்தை கணக்கில் கொள்வீர்களா?
ஆமாம் 40 நிமிடத்தில் முடிக்க வேண்டும் 44% (சரியான / அதிக வாக்கு)
-
இந்த வாக்குமுடிவில், பொறுமையாக நிதானமாக செய்வதே வழக்கம் 40% என்ற வாக்கையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், பயிற்சியை கற்றுக்கொள்பவர் எந்த வயதுடையவர் என்ற கருத்தையும் இங்கே நாம் பார்க்க வேண்டிதாக உள்ளது.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேதாத்திரியம் வழங்கிய ‘எளிய முறை உடற்பயிற்சி’ நம்முடைய வாழ்க்கை பயணத்தில், நம் உடலை நலமாக, அதன் வழியாக மனதை இயல்பாக வைத்துக்கொள்ள நமக்கு கிடைத்த மிக எளிமையானதும், சிறப்பானதுமான பயிற்சி ஆகும். உலகில் இதுவரை இருக்கும் உடல், மன ஒருங்கிணைப்பு பயிற்சிகளின் மொத்த வடிவம் எனலாம். இதை கற்றுக்கொள்ள வயதுவரம்பு இல்லை எனினும், பருவமடைந்த இளம்வயதிலேயே ஆணும், பெண்ணும் கற்றுக்கொள்ளலாம்.
இப்பயிற்சிகளை மொத்தமாக 40 நிமிடங்களில் செய்து முடிக்கலாம் எனினும், எல்லோராலும் அந்த நேரத்திற்குள் செய்யமுடியாது என்பதே உண்மை. எல்லோருக்கும், உடல் இயக்க அசைவுகள் ஒரே மாதிரி அமைவதில்லையே. நேரத்தை கணக்கில் கொண்டு, உடலை இயக்கினால் அது தசை, எலும்பு இவற்றில் பொருந்தா உணர்வு தோன்றலாம். அதனால் 40 நிமிடங்களில் முடிக்கவேண்டுமே என்று இல்லாமல், பொறுமையாக நிதானமாக செய்வதே நன்று. அப்படி செய்து பழகியவர்களும் நாளடைவில் அந்த 40 நிமிடத்திற்குள் என்ற நிலை எட்டிவிடுவார்கள். எனவே பொதுவாக நேரக்கணக்கு பார்க்க வேண்டியதில்லை, ஆனால் பயிற்சியை இயல்பான வேகத்தில் செய்து பழகிக் கொள்ளவேண்டியது அவசியமாகும்!
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments