Ticker

    Loading......

How you get the answer in Vethathiriya Yoga?

கேள்வியோடு காத்திருந்தால், அதற்கான பதில் கிடைத்துவிடுகிறதா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 307 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே, வேதாத்திரியத்தில் கேள்வியோடு காத்திருந்தால், அதற்கான பதில் கிடைத்துவிடுகிறதா?

நமக்குள்ளாகவே அந்த பதில் கிடைத்துவிடுகிறதே 60% (சரியான / அதிக வாக்கு)

-

மனதை ஒருமுகப்படுத்தும் எந்த ஒரு பயிற்சி செய்பவர்களுக்கும், கேள்விக்கான பதில்கள் மனதிற்குள்ளேயே உருவாவதை அறிவார்கள். அதைவிடவும் அதிகமான மன ஓர்மை, தவத்தால் கிடைக்கிறது என்பது உண்மை. 

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேதாத்திரியம் வழியாக, எளிமையான குண்டலினி யோகம் கற்று தவம் இயற்றுகிறோம். அதன்வழியே மனம், தன்னுடைய வழக்கமான இயக்கங்களை திருத்தி மன ஓர்மைக்கு பழகுகிறது. ஒவ்வொருநாளும் தவம் பழகப்பழக மனதின் திறமையும் கூடிடும். நமக்குள் எழும் கேள்விக்கான விடையை தானாக யூகித்து அறியும் தன்மை, நம் மனதிற்கு கிடைத்துவிடுகிறது. 

அப்படி இல்லையென்றாலும், யாரிடம் இந்தக்கேள்விக்கான பதில் கிடைக்கும் என்ற சிந்தனையில், சரியான நபரை தேர்ந்தெடுக்கிறது என்றும் சொல்லலாம்! மேலும் சிலநேரங்களில், நமக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை, சந்தேகத்திற்கான விளக்கத்தை, தகுந்த நேரத்தில் பெறமுடியாது போனாலும் கூட, குறிப்பிட்ட காலத்தில், நேரத்தில் நமக்குள்ளாகவே தானாக அந்த பதில் கிடைத்துவிடும் என்பதே உண்மையாகும். இதை பெரும்பாலான அன்பர்கள் உணர்ந்திருப்பார்கள். அவர்களே இந்த 60% வாக்குகளை இங்கே தந்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்றால்?!

அதுவே இயற்கை, ‘மேட்டில் உள்ள நீர் பள்ளம் நோக்கி நகர்வது போல’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுவதை சொல்லலாம். பரபரப்பாக மனம் இயக்கி பழகிக் கொண்டோருக்கும், எப்போதும் உணர்ச்சி வசப்பட்டோருக்கும் இது எப்போதும் நிகழ வாய்ப்பில்லை. தவத்தின் வழியாக மனதை செம்மைப்படுத்தும் அன்பர்களுக்கு மட்டுமே இது அனுபவமாக கிடைக்கும் என்பதே உண்மை. தானாக பதில் கிடைக்கும் என்பதற்காக, கேள்விகளை மட்டுமே மனதில் அடுக்கிக்கொண்டே இருப்பதும் சரியல்ல. ஓவ்வொரு கேள்வியையும் நீங்களே ஆராய்ந்து பார்க்கும் பழக்கத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

வாழ்க வளமுடன்!

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments