வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 319 Votes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
இதற்கு கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, தவத்தில் அந்தந்த ஆதாரங்களை நீங்கள் எப்படி தொடர்பு கொண்டு தவம் செய்கிறீர்கள்?
நினைத்த உடனே அங்கே மனம் நிலைக்கும் 70% (சரியான / அதிக வாக்கு)
-
அப்பாடா, இன்று அன்பர்கள் ஒரே நிலைப்பாடை கண்டிருக்கிறார்கள். சரியான, அதிக வாக்கு ஆகிய இரண்டுமே ஒன்றுதான். வாழ்க வளமுடன்.
நாம் வேதாத்திரிய தவம் செய்யும் பொழுது, மூலாதாரம், ஆக்கினை, துரியம் என்ற ஆதார நிலைகளும், ஒன்பது மைய தவத்தில், மூலாதாரத்திற்கும், ஆக்கினைக்கும் இடையிலான, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி ஆகிய ஆதார நிலைகளிலும் தவம் இயற்றுவோம். இதுபோக சூட்சுமமான நிலைகள் துரீயாதீத தவத்தில் உண்டு.
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! அன்பர்கள் தீட்சை எடுத்துக்கொள்ளும் பொழுது ஸ்பரிச தீட்சையாக, ஆதாரம் தொட்டு காட்டப்படும். அடுத்தடுத்த தவமுறைகளில், அந்த ஆதார நிலைகள் உணர்த்தப்படும். இதை நாம் தொடர்ந்து தவம் செய்வதால் பழகிக் கொள்ளலாம். எனினும் சரியாக தவம் செய்யாதவர்கள், ஆர்வம், முயற்சி இல்லாதவர்களுக்கு ஆதார நிலைகளை நினைவுக்கு கொண்டுவருவது கடினம்.
தனக்குத்தானே தொட்டுக்கொள்ளுதல் சரி என்றாலும், அது தொடரக்கூடாது. மனதால் அந்த ஆதாரங்களை நினைத்த உடனே அங்கே மனம் நிலைக்க வேண்டும். அந்த ஆதாரங்களின் பெயரைச் சொன்னாலும் மனம் அங்கே நிலைக்க வேண்டும். அப்படி உங்களை பழக்கப்படுத்துக. அதுதான் உங்களை தவத்திலும், யோக வாழ்விலும் உயர்த்தும் என்பதை அறிக.
வாழ்க வளமுடன்!
-
நன்கொடைகள் (Donate) வழங்க:
UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl
Present by:
0 Comments