Ticker

6/recent/ticker-posts

Why you need to ask forgive to others by your actions?

தெரியாமல் துன்பம் விளைவித்துவிட்டால், அவரிடம் மன்னிப்பு கேட்பதுண்டா?


வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 350Votes/29Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)

-

கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.

அன்பர்களே.  தெரியாமல் துன்பம் விளைவித்துவிட்டால், அவரிடம் மன்னிப்பு கேட்பதுண்டா?

நேரடியாக மன்னிப்பு கேட்டுக்கொள்வேன் 60% (சரியான / அதிக வாக்கு)

மனதளவில் எனக்குள் மன்னிக்க சொல்வேன் 36% (சிறப்பு வாக்கு)

-

அன்பர்களே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மூலமாக, அகத்தாய்வு எனும் தற்சோதனை பயிற்சியை நாம் பெற்றிருக்கிறோம். இதன்படி, நாம் நம்முடைய வாழ்வில் செய்த தவறுகளை திருத்தவும், அந்த நல்லதை கடைபிடிக்கவும் உறுதி கொள்கிறோம். அந்த வழியில்தான் இந்த வாக்குப்பதிவும் உள்ளது.

இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! வாழ்வில் நமக்கு நாமே தவறுகள் செய்வதில் கவனமாக இருப்போம். அதாவது நான் இதனால் பாதிப்படையக் கூடாது என்பதாக. அப்படியும் சில நேரங்களில், பாதிக்கப்பட்டு துன்பம் அடைவோம். பெரும்பாலான அன்பர்களின் வாழ்வில் அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை திருத்திடவும் முயற்சிக்கிறோம்.

ஆனால், இதேபோல பிறருக்கும், மற்றவர்களுக்கும் ஒரு தவறை நாம் செய்தால் அல்லது செய்தது தவறாக போய்விட்டால், தனியாக நாம் வருந்துவதில்லை. அவரிடம் மன்னிப்பு கேட்பதும் இல்லை. ஏனென்றால், பாதிக்கப்படப்போவது அவர்தானே, நான் இல்லையே என்ற கருத்து இருக்கும்.

என்றாலும் கூட, இயற்கை நியதியில், உன்னாதால் இவருக்கு துன்பம் விளைந்தது என்று, நம்மையும் அவரையும் அந்த துன்பத்தையும் பதிந்து வைத்துக்கொள்ளும் என்பது நீங்கள் அறிவதே இல்லை. என்றாவது காலத்தில் அது திரும்ப உங்களுக்கே வழங்கப்படும் என்பதை மறவாதீர்கள்.

தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு என்றால் பாதிப்பு ஒன்றுதானே?! தெரிந்து செய்வது என்பது மனிதருக்கு மனிதரே செய்யும் தீங்கு. தெரியாமல் செய்வது என்பது மனித இயல்பில் பழக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது இயல்பு அல்ல. எனவே திருத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

எனவே நீங்கள் பிறருக்கு  செய்தது தவறு என்று, உங்களுக்குள்ளாக விளக்கம் பெற்றால், உடனடியாக, ‘ஐயா நான் தவறு செய்துவிட்டேன், எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது, என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். வெளியே கேட்க முடியவில்லை என்றால், மனதிற்குள்ளாவது ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லிக்கொள்ள பழகலாமே! மேலும் அதற்கு மாற்றாக என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை அவருக்கு உடனே அல்லது பிறகு செய்துவிடவும் வேண்டும். 

உண்மையாக அவர், நம்மை மன்னித்துவிட்டால், நம்மிடமும் ஒரு பதிவு கூடுவதில்லை, மேலும் இருப்பதை கழித்துவிடவும் செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே இனிமேலாவது நாம், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் முனைப்பாக இருப்போமே!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

-

நன்கொடைகள் (Donate) வழங்க:

UPI: 9442783450@UPI
GPay: 9442783450@okhdfcbank
WhatsApp: 9442783450.wa.qvi@wahdfcbank
Bhim UPI: 9442783450@upi
PhonePe: 9442783450@ybl

Present by:

Post a Comment

0 Comments