வணக்கம், அன்பர்களே, நம் வேதாத்திரிய சானலில், தினமும் ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்துகிறோம் அல்லவா, அதில் இன்று கிடைத்த வாக்கின் விபரம் மற்றும் விளக்கம் காண்போம். கலந்துகொண்டோர் வாக்கு மொத்த எண்ணிக்கை 245Votes/11Likes.(இந்த பதிவு தரும் நேரத்தில் மட்டும்)
-
கிடைத்த சரியான வாக்கு /அதிகமான வாக்கு என்ன? பாருங்கள்.
அன்பர்களே, தன்னை உயர்த்திக்கொள்வதும், தாழ்த்திக்கொள்வதும் சரிதானா?
சமநோக்காக இருந்து பழகிக்கொள்வதே நல்லது 75% (சரியான / அதிக வாக்கு)
-
அன்பர்களே, உலகியல் வாழ்வுமுறைகளில் பெரியவர்களுக்கு மரியாதை என்பது உண்டு. அது அவர்களை மதித்து சிறுவர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கொண்டுவந்த வழக்கப் பழக்கமுறை ஆகும்!
இதை இன்னும் விளக்கமாக பார்க்கலாமே! பெரியவர்கள் எனும்போது, வாழ்வியல் அனுபவம் கண்டவர்கள், வயதிலும் உயர்ந்தவர்கள். இதனால் சிறிவர்களுக்கான அறிவுரைகள் கிடைக்கும். அதன்வழியாக சிறுவர்கள் அந்த அறிவுரைகளை கேட்டு, தங்கள் வாழ்வை துன்பமில்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கம் இருக்கிறது. அதனால்தான் பெரியவர்களை மதிக்கவேண்டும். இது தன்னை தாழ்த்திக் கொள்வது அல்ல.
அதுபோலவே பெரியவர்களும் சிறியவர்களுக்கு மதிப்பு தருவார்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் மிகச்சரியாக பதில் கொடுத்து உதவுவார்கள். சிறுவர்கள் அளவுக்கு இறங்கியும் பேசுவார்கள். இவர்களிடம் தன்னை உயர்த்திக்கொள்ளும் மனப்பான்மை இருப்பதில்லை.
ஆனால் பெரும்பாலான நடைமுறை வாழ்வில் மக்களிடம் தன்னை உயர்த்திக்கொள்வதும், தாழ்த்திக்கொள்வதும் அதிகமாகவே உண்டு. வாழ்வியல் அனுபவம், அறிவு இவற்றைப் பெற்றவர்கூட தன்னை உயர்த்திக் கொள்வதை பார்க்கமுடிகிறது. அவர் பெற்ற அறிவு இந்த சமூகத்தால் தானே வழங்கப்பட்டது என்பதை அவர் அறிவதில்லை. சிலர், பிறரிடம் காரியம் ஆகவேண்டும் என்றால், தன்னை அப்போதைக்கு மட்டும் தாழ்த்திகொண்டு காய் நகர்த்துவார்கள். இதை எல்லாமக்களும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால்,
சூழ்நிலைக்கு தக்கபடி இருந்தால்தான் பிழைப்பு ஓடும் 5%
மேலும் பணம், பொருள்நிலை மாற்றம், உயர்வுகளுக்காகவும் தன்னை உயர்த்திக்கொள்வதும், தாழ்த்திக்கொள்வதும் எப்போதும் உண்டு. இப்படியான நிலை, மனிதன் மனிதனை மதிக்காத, சமநோக்கில் பார்க்காத இந்தநிலை பெரும்பாவத்தை உண்டு செய்கிறது, அதுதான் பழிச்செயலாகவும் மலர்கிறது என்று ஞானிகளும், மகான்கள் சொல்லுகிறார்கள்.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மூலமாக, அகத்தாய்வு எனும் தற்சோதனை பயிற்சியை நாம் பெற்றிருக்கிறோம். இதன்படி, நாம் நம்முடைய வாழ்வில் இருக்கிற பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொள்கிறோம். அவற்றில் ஒன்றுதான் ‘உயர்வு தாழ்வு மனப்பான்மை’ இதை மாற்றி ‘சமநோக்கில்’ பார்த்து வாழ பழகிக்கொள்கிறோம்.
சிலர் சமநோக்கு வந்துவிட்டால், மரியாதைக்குறைவு ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள். அது அப்படியல்ல, சமநோக்கு என்றால், மனிதர் மனிதரை ‘மதித்து மரியாதையோடு’ கலந்து காரியங்கள் ஆக்கிக் கொள்வது என்பதை மறவாதீர்கள். மீண்டும் இங்கே பெரியோர், சிறியோர் மதிக்கும் உறவுபயன்களை நினைவுபடுத்திக் கொள்வீராக!
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
0 Comments